சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமாவளவன் திமுக அணியிலிருந்து விலகுவார் பாருங்க.. கடைசியில் பாமக பாலு சொல்வதுதான் நடக்க போகிறதோ

திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து திருமாவளவன் சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமாவளவன் திமுக அணியிலிருந்து விலகுவார் பாருங்க..?- வீடியோ

    சென்னை: கடைசியில் பாமக வக்கீல் பாலு சொன்னதுதான் நடக்குமோ.. திருமாவளவன் திமுக கூட்டணியை பற்றின பேச்சு இன்னும் அடங்கின மாதிரி இல்லை!

    3 நாளைக்கு முன்னாடி ஒரு ஆங்கில நாளிதழுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு பேட்டி அளித்திருந்தார்.

    அதில், "இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்திருக்கிற நிலையில் சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஆனாலும் கூட்டணி பற்றி என்னைக் கேட்டீர்கள் என்றால், ஒரு கூட்டணி என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. நாங்கள் இப்போது வளரும் கட்சி. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் திமுக, அதிமுக என்ன நிலைப்பாடு மேற்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுப்போம்" என்றார்.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்!சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்!

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    திருமாவளவன் இப்படி பேசி நாட்கள் கடந்தாலும், இன்னமும்கூட இதன் மீதான சலசலப்பு குறையவில்லை. இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டதால், திமுக கூட்டணியில் விசிக நீடிக்காதா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

    சீட் விவகாரம்

    சீட் விவகாரம்

    இதற்கு முதல் காரணம், திமுக கூட்டணியில் இருப்பது போலவே இருந்தாலும், அதை பகிரங்கமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எடுத்து கொண்ட காலநேரம் கொஞ்சம் அதிகம்தான். கூட்டணி என்று அறிவிக்க எடுத்து கொண்ட காலதாமதம் ஒரு பக்கம் என்றால் சீட் விவகாரம் அதைவிட பெரும் பிரச்சனையாகிவிட்டது.

    உதயசூரியன்

    உதயசூரியன்

    கடைசியில் விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகளில் விசிக போட்டியிட முடிவான நிலையில், உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக தலைமை வலியுறுத்த, திருமாவளவனோ, விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரத்தில் தனி சின்னத்திலும் போட்டி என்ற அதிரடி நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஒரு வித்தியாசமான முடிவை திமுக தலைமை விரும்பவில்லை என்றே சொன்னார்கள்.

    விசிக கொடிகள்

    விசிக கொடிகள்

    இதையடுத்து, கூட்டணியின் பிரச்சாரங்களில் விசிகவின் பங்கு பெரிதாக இல்லை. திமுக கூட்டணி சார்பாக திருமாவளவன் சிதம்பரம் தொகுதி தவிர வேறு எங்குமே பிரச்சாரம் செய்யப்படவில்லை. விசிக கொடிகள் திமுக கூட்டணி கொடிகளுடன் சேர்ந்து பறக்கவிடப்படவில்லை. திமுக ஆசிபெற்ற விசிக வேட்பாளர் என்றும் விளம்பரப்படுத்தப்படவில்லை என்று பரவலான பேச்சும் எழுந்தது.

    பொன்பரப்பி

    பொன்பரப்பி

    இது இடைத்தேர்தல் பிரச்சாரங்களிலும் எதிரொலிக்கவே செய்கிறது. ஏனெனில் 4 தொகுதி இடைத்தேர்தல்களில் ஓட்டப்பிடாரம் தவிர தலித்துகள் கணிசமாக இருந்தும், திருமாவளவன் பிரச்சாரம் செய்வதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் திருமாவளவனின் பேட்டி அமைந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக, பாமக பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

    இரட்டை வேடம்

    இரட்டை வேடம்

    அப்போது, "திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்தியது. அது உங்கள் எல்லோருக்குமே தெரியும். திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட்டார், ஆனால் அவரை வேறு எந்த தொகுதியிலுமே பிரச்சாரம் செய்ய திமுக அனுமதிக்கவில்லை. கூட்டணி கட்சி கொடிகள் பறக்க விடுவதில் திமுக கவனமாக கையாண்டது. திருமாவளவன் இந்த தேர்தலில் தன்னுடைய கூட்டணி கட்சியினரை எப்படி திமுகவினர் நடத்தினார்கள் என்று ஒருநாள் திருமாவளவனே உங்களிடம் வந்து சொல்வார் பாருங்கள். அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்" என்றார்.

    பிடிபடவில்லை

    பிடிபடவில்லை

    நடந்து முடிந்த சம்பவங்களை பார்த்தால், வழக்கறிஞர் பாலு சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது பிடிபடவில்லை. அதை வரும் காலம்தான் நமக்கு தெளிவுபடுத்தும்!

    English summary
    Thirumavalans Controversy speech about Alliance with DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X