சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துவா, முஸ்லீமா என பார்க்க கூடாது.. ஆரியமா, திராவிடமா என்ற பார்வைதான் சரி: ஆளுர் ஷா நவாஸ் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: மன்னடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுர் ஷாநவாஸ், மத்திய பாஜக அரசைக் கடுமையாக சாடி பேசினார்.

Recommended Video

    இந்துவா, முஸ்லீமா என பார்க்க கூடாது.. ஆரியமா, திராவிடமா என்ற பார்வைதான் சரி:

    வடசென்னை மன்னடி பகுதியில் தமிழக மஸ்ஜீத்களின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்கஅடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிகவை சேர்ந்த நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் கலந்து கொண்டார்.

     அமைதியின்மை ஏற்பட்டால்

    அமைதியின்மை ஏற்பட்டால்

    அப்போது பேசிய எம்எல்ஏ ஆளுர் ஷா நவாஸ், "நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டால் அதனால் மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டும் சுமக்கப் போவது இல்லை. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தான் இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுமக்க வேண்டும். அமெரிக்காவில் அதிபராக இருந்த டிரம்பிற்கு ஆதரவாகப் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வாக்கு சேகரித்தார்.

     ராஜபக்ச

    ராஜபக்ச


    ஆனால், ட்ரம்ப் சில காலத்திலேயே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு காலத்தில் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபக்சே, இப்போது அந்நாட்டு மக்களாலே விரட்டியடிக்கப்பட்டார். அதுபோன்ற ஒரு சூழல் இந்தியாவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விரைவில் அந்த ஒரு சூழலை இந்திய நாடும் பார்க்கும்.

     கேலிக்கூத்தானது

    கேலிக்கூத்தானது

    சுதந்திர இந்தியாவில் குற்றம் செய்த ஏதேனும் ஓர் இஸ்லாமியன் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் நபரைப் பார்க்க முடியுமா? சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த நுபுர் சர்மாவைக் கைது செய்வதைத் தவிர்த்து மன்னிப்பு கேட்கச் சொல்வது கேலிக்கூத்தானது. சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யவேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றச் சம்பவத்தைத் தானும் செய்தேன் என அர்ஜுன் சம்பத்தே ஒப்புக் கொண்டு உள்ளார்.

     ஆரியமா திராவிடமா

    ஆரியமா திராவிடமா

    அர்ஜுன் சம்பத்தையும் இஸ்லாமியர்களையும் சட்டம் வேறு வேறாகப் பார்க்கிறதோ என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாத சூழல் ஏற்படும் ஆபத்தான சூழல் உருவாகும் ஆபத்து உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரியமா திராவிடமா என்பது தான் இங்கு வாதமே தவிர இந்துவா? இஸ்லாமியரா? என்பதல்ல. அத்தகைய புரிதல் கொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் இந்த கருத்து இந்தியா முழுவதும் பரவினால் இஸ்லாமியர்களும் இந்தியாவும் பாதுகாக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Aloor Shanavas says in Muslims are treated as secondary citizens in India: (முஸ்லீம்கள் குறித்து ஆளுர் ஷா நாவாஸ்) Aloor Shanavas explains about Tamilnadu's politcal idealogy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X