சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரிசோதனைகள் முழுமை அடையாத கோவேக்சின் தடுப்பூசி-தமிழகத்தில் அனுமதிக்க கூடாது-விசிக எம்பி ரவிக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: பரிசோதனைகள் முழுமை அடையாத கோவேக்சின் (கோவாக்சின்) கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின் அல்லது கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி இதுவரை 3 கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

VCK MP Ravikumar urges to not allow Covaxin in TN

ஆனால் 2 கட்ட பரிசோதனைகள் முடிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளன. 3-ம் கட்ட பரிசோதனைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பொதுமக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனையடுத்து கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இந்த கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என லோக்சபா எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் ரவிக்குமார் எழுதியுள்ளதாவது:

உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும்

சுதேசி தடுப்பூசி என சொல்லப்படும் கோவேக்ஸின் குறித்து மருத்துவ வல்லுநர்கள் எழுப்பும் ஐயம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.

English summary
VCK MP Ravikumar has urged that Tamilnadu Govt not to allow Covaxin in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X