சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் வரலாறு எழுதுவதற்கான குழு அமைக்கும் யோசனையையே நிராகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இந்திய வரலாறு குறித்து எழுதுவதற்கான ஒரு ஆய்வுக் குழுவை அறிவித்தது. ஆனால் இந்த ஆய்வுக் குழுவில் தென் இந்தியர் எவரும் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையானது.

VCK MP Ravikumar urges to reject the Centres panel to study origins of Indian culture

மேலும் வடகிழக்கு மாநில பிரதிநிதிகளோ சிறுபான்மையினரோ இந்த குழுவில் இடம்பெறவும் இல்லை. இதனால் இந்த குழுவில் தென் இந்தியர், வடகிழக்கு இந்தியர், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் இடம்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார்.

மதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம் மதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இதனிடையே மத்திய அரசு புதியதாக மற்றொரு குழுவை அமைக்க இருக்கிறது என செய்திகள் வெளியாகி இருந்தன.

VCK MP Ravikumar urges to reject the Centres panel to study origins of Indian culture

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார், வரலாறு எழுதுவது ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல. குழுவில் இடம் கேட்பதற்கு பதிலாக, இந்த யோசனையை நாம் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

English summary
VCK MP Ravikumar tweets that Writing history is not the duty of a government. Instead of asking a place in the committee , we should reject this idea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X