சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவுடன் விசிக கூட்டணி என்பதே கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது.

கூட்டணி கட்சிகள் சிலவற்றையும் கூட உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க முயற்சிக்கிறது. கடந்த காலங்களைப் போல திமுக, கூட்டணி கட்சிகளுக்கு இம்முறை சீட்டுகளை அள்ளி கொடுக்காது என்பதால் அந்த கூட்டணியில் மாற்றங்கள் வரலாம் என கூறப்படுகிறது. அதிமுக அணியைப் பொறுத்தவரையில் அதன் கூட்டணி கட்சிகளாக இருந்த அனைத்தும் ஆளுக்கு ஒரு திசையில் இருக்கின்றன.

தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த் தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த்

எல்லா கூட்டணிக்கும் கதவு திறப்பு

எல்லா கூட்டணிக்கும் கதவு திறப்பு

அதிமுக அணியில் இருந்த பாஜக, தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கிறது; பதிலுக்கு பாஜகவை அதிமுக அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். தேமுதிகவைப் பொறுத்தவரையில் வழக்கம் போல எல்லா கூட்டணிகளுக்கும் கதவை திறந்து வைத்திருக்கிறது. கதவை திறந்துவைப்போம்.. வந்த வரை லாபம் என்பதுதான் தேமுதிகவின் கூட்டணி பாலிசியாகிவிட்டது. இதனையே இந்த தேர்தலிலும் தேமுதிக பின்பற்றுகிறது.

பாமக- ரஜினி கூட்டணி?

பாமக- ரஜினி கூட்டணி?

பாமகவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும்; இதற்கான முயற்சிகளை ரஜினிகாந்த் தரப்பு படுதீவிரமாக மேற்கொண்டது; இதனை பாமக தரப்பும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இப்போதும் பாமக- ரஜினி கட்சி கூட்டணி அமையவே வாய்ப்புகள் அதிகம் என்கிற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

விசிக குறித்து ராமதாஸ் கருத்து

விசிக குறித்து ராமதாஸ் கருத்து

இன்னொரு பக்கம் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கவே அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகி உள்ள துரைமுருகன் இதற்கான முன்முயற்சிகளை படுமுனைப்பாக மேற்கொண்டு வருகிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவுடன் கூட்டணி இல்லை

பாமகவுடன் கூட்டணி இல்லை

இதனால் திமுக கூட்டணியில் பாமகவும் அங்கம் வகிக்கலாம் என்கிற கருத்து வலுவாகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரோ, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டோம். இதனை கொள்கை முடிவாகவே எடுத்திருக்கிறோம். கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாடு பல்வேறு புதிய யூகங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

புதிய கூட்டணி?

புதிய கூட்டணி?

திமுக கூட்டணியில் தங்கள் நினைத்தபடி சீட் பெற முடியாத நிலைக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளன. ஒருவேளை தற்போதைய திமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணையும் நிலையில் இயல்பாகவே விடுதலை சிறுத்தைகள் விலகலாம்; போதுமான சீட்டுகள் கிடைக்காத நிலையில் காங்கிரஸும் திமுக அணியில் இருந்து வெளியேறக் கூடும். இதனால் திமுக- அதிமுக அல்லாமல் தினகரனின் அமமுக அல்லது மநீம அல்லது ரஜினி கட்சி தலைமையில் மேலும் ஒரு கூட்டணி வலிமையாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

English summary
VCK President Thirumavalavan has ruled out on Alliance with PMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X