சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளை முன்வைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்பது நியாயம்தானா? என திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் சோனியாவின் கறுப்பு பூனை படை வாபஸ் குறித்து திமுகவின் எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற நிலையில் அவருக்கான பாதுகாப்பு ஏன் வாபஸ் பெறப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

VCK slams DMK and Congress on LTTE Issue

இது தமிழகத்தில் கடும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், திமுகவின் இந்த பேச்சு இனத்துரோகம் என சாடியிருந்தார். தற்போது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தமது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்புலிகள் தேசத்தின் காவலர்கள்.சிங்கள பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம் மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகும், விடுதலைப்புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்கள்... திமுக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடிபுதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்கள்... திமுக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

ஏற்கனவே சென்னை மாநகராட்சியை ரிசர்வ் தொகுதியாக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் வலியுறுத்தியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தற்போது விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக- காங்கிரஸை வெளிப்படையாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்திருக்கிறது. இதனால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

English summary
VCK state Deputy General Secretary Vanni Arasu has slammed DMK and Congress on LTTE issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X