சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா சாலையில் தள்ளுமுள்ளு.. ரோட்டில் உருண்டு புரண்டு.. திரும்பி பார்க்க வைத்த சிறுத்தைகள்!

சென்னை மறியலில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாசாலையையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் திருமாவளவன்.. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் கிட்டத்தட்ட 1500 பேர் திருமாவளவனுடன் சேர்த்து கைதானார்கள்.. மறியல்.. ரோட்டில் புரண்டு.. உருண்டது.. தள்ளுமுள்ளு.. கைது போன்ற நடவடிக்கையால் அண்ணாசாலையே பதட்டமாக காணப்பட்டது!

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி அண்ணாசாலையில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

VCK thirumavalavan arrested in Central Trade Union Strike

தொமுச., சிஐடியு, ஏஐடியுசி., ஐஎன்டியுசி, மதிமுக, விசிக உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலையிலேயே தாராபூர் டவர் அருகில் ஒன்று கூடினர்.. உடனடியாக மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்ப தொடங்கினர்.

அந்த இடத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார்.. அவரை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜனும் வந்தனர்.. அனைவருமே ஒன்று சேர்ந்து அண்ணாசாலை நடுரோட்டில் உட்கார்ந்துகொண்டனர்.

இவர்களுடன் போராட்டத்தில் இருந்த தொழிலாளர்களும் ஒன்று திரண்டு நாலாபுறமும் சூழ்ந்து உட்கார்ந்தனர்.. இதனால் போலீசார் விரைந்து வந்து அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.. ஆனால், தொழிலாளர்கள் ரோட்டிலேயே படுத்தும், உருண்டும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்..

ஓ மை காட்.. லேப்டாப் முழுசும் நிர்வாண வீடியோ..11 பெண்களை மிரட்டியே.. கைதான இளைஞரின் பகீர் பின்னணி!ஓ மை காட்.. லேப்டாப் முழுசும் நிர்வாண வீடியோ..11 பெண்களை மிரட்டியே.. கைதான இளைஞரின் பகீர் பின்னணி!

இதற்கு பிறகு மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அந்த சமயத்தில், போலீசாருடன் தொண்டர்களுக்கு வாய்த்தகராறு ஏற்படவே, திரும்பவும் ரோட்டில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போதும் போலீசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.. ஆனால் போலீசார் எதையுமே கண்டுகொள்ளாமல், கைது நடவடிக்கையில் இறங்கினர்.

கிட்டத்தட்ட மறியலில் ஈடுபட்ட 1200 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும், சமுதாய கூடத்துக்கு அழைத்து சென்றனர். இந்த மறியலால் அண்ணாசாலையே நெருக்கி தள்ளப்பட்டது.. டிராபிக் ஜாம் ஆகி பஸ்கள் எல்லாம் திருப்பிவிடப்பட்டன.. மறியல்.. ரோட்டில் புரண்டு.. உருண்டது.. தள்ளுமுள்ளு.. கைது போன்ற நடவடிக்கையால் அண்ணாசாலையே பதட்டமாக காணப்பட்டது!

English summary
VCK thirumavalavan citu state president soundarajan including 1500 arrested in Central Trade Union Strike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X