• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"எஸ்சி..ன்னு தெரிஞ்சாலே.. போதையில் கூட தலித்துகளை மட்டும் கொலை செய்வதா".. கொந்தளித்த திருமாவளவன்..!

|

சென்னை: "ஒருத்தன் எஸ்சி-ன்னு தெரிஞ்சாலே, அவனை இன்சல்ட் செய்வது.. தாக்குவதுதான் நடக்கிறது.
ஏன் மற்ற சமுதாயத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்படவில்லை.. இந்தியா முழுக்க குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பதாகத்தான் இருக்கிறது.. நீங்கள் நேர்மையான மனுஷங்களா இருந்தால், உங்க கட்சிக்கு இது சம்பந்தம் இல்லேன்னா, மொத்தல்ல இந்த அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து ஒரு அறிக்கை விடுங்க பார்ப்போம்:" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது... இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதன் சுருக்கம் இதுதான்:

அந்த கத்தி ரொம்ப ஷார்ப்பா இருக்கு.. அந்த கத்தியால் குத்தப்பட்டு, தாயின் மடியில் சூர்யா சரிந்து கீழே விழும்போது, ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போடறாங்க.. அப்பவுமா அவனுக்கு போதை இருக்கு?.. அந்த நேரத்திலுமா அவன் தடுமாறி செய்கிறான்? வாக்குவாதத்தில் எப்படி ஒரு கும்பலுக்கு கொலை செய்ய வேண்டும் என்ற வெறி வரும்?

"அவங்கள தூக்கிடலாம்".. ஸ்டிராங் நம்பிக்கையில் தினகரன்.. தெற்கை அள்ளுமா அமமுக?

பாஜக

பாஜக

ஆக, அதிமுக - பாமக - பாஜகவினர் திட்டமிட்டு நடத்திய பச்சை படுகொலை இது.. அவர்கள் தலித் இளைஞர்கள் என்பதாலேயே நிகழ்த்தப்பட்ட படுகொலை.. இந்த மாதிரி சண்டை மற்ற சமுதாயத்திலும் நடக்குது.. ஆனால், இப்படி கொலை செய்ததாக சொல்லுங்க பாரப்போம்.. தொழிற்போட்டியில் வேண்டுமானால் கொலை சொந்த சமூகத்தில் நடக்கும்.. ஆனால், அரசியல் விவகாரங்களில், அதுவும் சாதாரண பிரச்சனைகள் கூட கொலை வரை செல்கிறது என்றால், அதன் பின்னணி என்ன?

 சமுதாயம்

சமுதாயம்

2 பேர் வாக்குவாதம் நடந்ததுன்னு சொல்றாங்க? அடிப்படை காரணம் கிடையாது.. சாதி வெறுப்பு என்பதுதான் அடிப்படை கொள்கை... சமுதாயத்தில் ஏற்கனவே இருக்கிற, கட்டமைக்கப்பட்டிருக்கிற, வேறு, பகை, வெறுப்புதான், அவன் எஸ்சி-ன்னு தெரிஞ்சாலே, அவனை இன்சல்ட் செய்வது.. தாக்குவதுதான் நடக்கிறது.
ஏன் மற்ற சமுதாயத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்படவில்லை.. இந்தியா முழுக்க குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பதாகத்தான் இருக்கிறது..

 திருமணம்

திருமணம்

சாதி விட்டு சாதி திருமணம் எல்லா சாதியிலும்தான் நடக்கிறது.. ஆனால், ஆணவக் கொலைகள் மற்ற சாதிகளில் இருப்பதாக சான்றுகள் இல்லையே ஏன்? முதலியாருக்கும் செட்டியாருக்கும் சாதி மறுப்பு திருமணம் நடக்கலையா? பிள்ளைமாருக்கும் முக்குலத்தோருக்கும் திருமணம் நடக்கலையா? ஆனால் கொலை?

 குடிபோதை

குடிபோதை

அரக்கோணத்தில் நடந்த இந்த இரட்டை படுகொலை என்பது குடிபோதையில் இரு தரப்பால் மோதிக் கொண்டதன் விளைவாக நிகழ்ந்த ஒரு சம்பவம் என்று சொல்வதை போல, இதைவிட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது.. வேண்டாத ஊடகங்கள் அதை அப்படி திசை திருப்புகின்றன.. பரப்புகின்றன... அந்த 2 இளைஞர்களுமே போதைப்பழக்கம் இல்லாதவர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்கள்.

 பின்னணி

பின்னணி

எந்த கட்சிக்காரர்கள் என்பது முக்கியமில்லை.. எந்த சமூக பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதுதான் முக்கியம்.. பாதிப்பு எங்கு நடந்தாலும் அதை கேட்க வேண்டும்... தன் கட்சிக்காரர்கள் என்பதால் மட்டும், தன் மொழியை சேர்ந்தவன் என்பதால் மட்டுமே போராட கேட்க வேண்டும் என்று நினைப்பது போல அறியாமை வேறு இல்லை.. உலகத்தில் மனித குலத்துக்கு எங்கு பாதிப்பு நடந்தாலும், அதற்காக யார் கொந்தளித்து எழுகிறானோ, அவன்தான் உண்மையான புரட்சியாளன். அதனால்தான் போராடியதால்தான் சேகுவேரா கொண்டாடப்படுகிறார்.. அதனால்தான் பிரபாகரன் கொண்டாடப்படுகிறார்.

 மதவெறியர்

மதவெறியர்

சாதி வெறியர்களும், மத வெறியர்களும் இந்த படுகொலையை கண்டிக்க வக்கில்லாமல், நாம் அரசியல் செய்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள்.. நீங்கள் நேர்மையான மனுஷங்களா இருந்தால், உங்க கட்சிக்கு இது சம்பந்தம் இல்லேன்னா, மொத்தல் இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு அறிக்கை விடுங்க.. பாமகவுக்கு இவங்க சம்பந்தம் இல்லைதானே? அப்போ 2 பேர் செத்து போயிருக்காங்கதானே? அறிக்கை விடுங்க... உங்க கட்சி மேல பழி போடறோம்னு சொல்றீங்களே, 2 உயிர் போயிருக்கே?

 விசாரணை

விசாரணை

அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட தலித் வாலிபர்களின் குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் போஸ்ட் மார்ட்டம் நடந்துள்ளது என்றும், இதனால் முறைப்படி குற்றப் புலனாய்வு செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? குற்றவாளிகளை தப்புவிக்க எல்லா வழி முறைகளையும் காவல்துறை செய்துள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் இந்த வழக்கு சரியான பாதையில் செல்லும்"என்றார்.

English summary
VCK Thirumavalavan says about Arakkonam Murder Case issue and PMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X