சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊர்ல நடக்கிற எல்லா "லவ் மேரேஜு"க்கும் நாங்க தான் பொறுப்பா?.. திருமாவளவன் ஆவேசம்

ராமதாஸ் தொடர்ந்து விசிக மீது அவதூறு பரப்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழ்நாட்டில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்,.. டாக்டர் ராமதாஸ் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் தமிழ்நாட்டு அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென தற்குறி தனத்தோடு அவதூறுகளை பரப்பி வருகிறார்... தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொறுத்து கொண்டிருக்க முடியாது. சட்டப்படி எதிர்கொள்வோம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "தேர்தலை அடுத்து சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட, இந்த அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.

ஆக்சிஜன் வாயு கசிவு விபத்து: 24 நோயாளிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி உத்தவ் தாக்கரேஆக்சிஜன் வாயு கசிவு விபத்து: 24 நோயாளிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி உத்தவ் தாக்கரே

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் பெறாமல், சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே ஒரு புகாராக எடுத்துக் கொண்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும், அவர் சொன்னதை முழுமையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதை துவக்கத்தில் இருந்தே காவல்துறை ஒரு சார்பாக உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறது.

 குற்றவாளிகள்

குற்றவாளிகள்

எனவே, அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற ஐயம் எழுகிறது. புலனாய்வு, விசாரணை தொடங்காமலேயே, குடித்துவிட்டு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் செய்ததால் ஏற்பட்ட மோதல், அதனால் இந்த இரண்டு பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று காவல்துறை முன்கூட்டியே கருத்துச் சொன்னது, விசாரணைக்கு எதிராக அமைந்து விட்டது.

 முரண்பாடு

முரண்பாடு

எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிப்பதில் நியாயம் கிடைக்காது, நீதி கிடைக்காது. இந்த இரட்டைக் கொலை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த தேர்தலை ஒட்டி ஏற்பட்ட முரண்பாடு பதற்றம் அதனடிப்படையில், சாதி வெறியர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்திருக்கிறார்கள் என்பதுதான் நேர்மையான, உண்மை அறியும் குழுவினர் முன்வைத்திருக்கும் தகவல்.

 வாய்த்தகராறு

வாய்த்தகராறு

சமாதானமாக பேசி கொள்வோம் என்று அர்ஜுன் சூர்யா தரப்பிற்கு தகவல் கொடுத்து அழைத்தது பெருமாள்ராஜ் பேட்டையை சேர்ந்த பாமக செயலாளர் மகன் சாதாரண வாய்த்தகராறு அதற்கு சமாதானம் பேச வேண்டும் என்கிற சூழ்நிலை இல்லாத நிலையில் அவர்களும் ஐயப்பனையும் வம்புக்கு இழுத்து அவர்கள்தான் முதலில் தாக்கியுள்ளனர்.

 சமாதானம்

சமாதானம்

அடிவாங்கிய இளைஞர்கள் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால், இவர்களே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமக்கு பிரச்சனை வேண்டாம் சமாதானம் செய்து கொள்வோம் வாருங்கள் என அழைத்திருக்கிறார்கள். உடனே, ஆட்களை திரட்டி வந்த வேகத்தில் கத்தியால் குத்தி இரண்டு பேரை படுகொலை செய்துள்ளார்கள். எனவே இது திட்டமிட்ட சாதியப் கொலை. அதற்கு இந்த தேர்தல், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடவடிக்கை ஒரு காரணமாக அமைந்துள்ளது.

 இழப்பு

இழப்பு

இதை மூடி மறைக்கும் வகையில் சிலர் திசைதிருப்ப பார்க்கிறார்கள். குற்றப் புலனாய்வு விசாரணைக்கு எதிராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி இம்மாதிரியான இழப்புகளை ஏற்படுகிறபோது அவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதோடு, அவர்கள் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்ற அடிப்படையில், தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலம் வழங்கியதில்லை. சட்டப்படி வழங்கும் நிதியை கூட உடனே தருவதில்லை. அதற்கு போராட வேண்டி இருக்கிறது, தொடர்ந்து வற்புறுத்த வேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் முதலமைச்சருக்கு கூட அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகவே, ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை சாதிய வன்கொடுமை பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

 காதலி

காதலி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் திசைதிருப்பும் வகையில் அவ்வப்போது சாதிய பிரச்சினைகளை ஒருமை படுத்தி கூறி வருகிறார். தயானந்த கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற இளம்பெண் காதலின் பெயரால் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால், அந்த கொலையையும் இந்த சொந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் இழப்பையும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கு ராமதாஸ் பயன்படுத்துகிறார். அருவெறுப்பான அநாகரிகமான அரசியலில் ராமதாஸ் கையில் எடுக்கிறார்.

 சரஸ்வதி

சரஸ்வதி

சரஸ்வதியின் கொலைக்கு காரணமாக காதல் இருக்கலாம், காதல்தான் காரணம்.. ஆனால் விசிகவை குறிவைத்து மறைமுகமாக தொடர்ந்து தாக்குவதும் அவதூறு பரப்பும் சமூக வலைதளங்களில் அதற்கான பிரச்சார களமாக பயன்படுத்துவது நீடிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்?

 ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ், வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் தமிழ்நாட்டு அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென தற்குறி தனத்தோடு அவதூறுகளை பரப்பி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொறுத்து கொண்டிருக்க முடியாது. சட்டப்படி எதிர்கொள்வோம், அவர் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்க உரிய ஏற்பாடுகளை செய்வோம்.

 பிரிவினை

பிரிவினை

ஒரு அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். அவர் திட்டமிட்டு தேவானந்தன் - சரஸ்வதி கொலை வழக்கில் எந்த வகையிலும் விடுதலை சிறுத்தை கட்சிக்குத் தொடர்பு இல்லை. ஆனால், திட்டமிட்டு பரப்பி வருவது, தமிழ் சமூகத்திற்கு இடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்துவதுடன், தமிழக நலனுக்கும் எதிரானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டி, தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
VCK Thirumavalavan says about PMK founder Ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X