சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்!

வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் என்று திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்? என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. விவசாயிகள் ரயில் மறியலில் இறங்கிவிட்டனர்.. காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது.. திமுக இன்று போராட்டம் செய்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது.

 VCK Thirumavalavan tweet about farmer bills

எனினும், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மையை மட்டுமே தரும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிடி கத்தரிக்காய் களப் பரிசோதனைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிடி கத்தரிக்காய் களப் பரிசோதனைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

இந்நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிட்டுள்ளதாவது:

 VCK Thirumavalavan tweet about farmer bills

"விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்?

1) விவசாய உற்பத்தி, வணிகம், போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்'மயமாக்குவதன் மூலம் விவசாய குடிகளுக்கு இவை எதிராக உள்ளன.

2) மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கின்றன.

3) நாடாளுமன்றத்தில் அடாவடித்தனமாக இவை நிறைவேற்றபட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
VCK Thirumavalavan tweet about farmer bills
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X