சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக, தொகுதி ஒதுக்கீடு... திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்? திருமாவளவன் சூசகம்

Google Oneindia Tamil News

சென்னை: பாமக மற்றும் தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது என்பதை அதன் தலைவர் தொல். திருமாவளவன் சூசகமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவுடன் விசிக கூட்டணி என்பதே கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம் தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவுடன் விசிக கூட்டணி என்பதே கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்

டாக்டர் ராமதாஸ் பேட்டி

டாக்டர் ராமதாஸ் பேட்டி

அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இதனால் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் இடம் பெறுமா? என்கிற கேள்விகள் எழுந்தன.

திருமாவளவன் நிராகரிப்பு

திருமாவளவன் நிராகரிப்பு

ஆனால் இதனை திட்டவட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிராகரித்தார். பாமகவுடன் எந்த காலத்திலும் இனி கூட்டணியே இல்லை என்று கூறிய திருமாவளவன், மிகக் கடுமையாகவும் அந்த கட்சியை விமர்சித்திருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாஜக, பாமக எதிர்ப்பு

பாஜக, பாமக எதிர்ப்பு

இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், பாரதிய ஜனதா கட்சியும் பாமகவும் சனாதான அரசியலை கையில் எடுத்திருக்கிற கட்சிகள்; சாதியவாதத்தையும் மதவாதத்தையும் தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார்கள். அந்த அரசியல் கட்சிகளுடன் எந்தச் சூழ்நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டணி வைக்காது என தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறோம். இதை திமுக, அதிமுகவுடன் முடிச்சு போடக் கூடாது என கூறினார்.

திமுக அணியில் நீடிக்காது?

திமுக அணியில் நீடிக்காது?

அப்போது, திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திருமாவளவன், உங்கள் யூகம் என்னவோ அதற்கு இடையூறாக நான் இருக்க விரும்பவில்லை என்றார். அதேபோல் திமுக 200 இடங்களில் போட்டியிடும் நிலை வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி வரும் என்றும் அந்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருக்கிறார். இதனால் பாமக, தொகுதி பங்கீட்டு விவகாரங்களை முன்வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறலாம் என்பதை மறைமுகமாக கோடிட்டுக் காட்டியுள்ளார் திருமாவளவன்.

English summary
According to the VCK President Thol. Thirumavalavan's internivew, his party may be break its alliance with DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X