சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7 தமிழர் விடுதலை- ஆளுநர் முடிவெடுக்கும்வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய விசிக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கும் வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தினார்.

VCK urges to release Seven Tamils in Parole

இதனால் தமிழக அரசு தமக்கான அதிகாரத்தின் கீழ் அறிவிக்கை வெளியிட்டது. இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் 7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதென்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரைமீது முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவது சரியல்ல என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தும் ஆளுநர் முடிவெடுக்காததால், முடிவெடுக்கும்வரை அவர்களை பரோலில் விடுவிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

English summary
VCK has urged to release Seven Tamils in Parole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X