சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேட்டுச்சாண்ணே.. சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும்.. சீமானை சீண்டிய வன்னி அரசு

ராமதாஸ், சீமானை சீண்டி வன்னி அரசு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த போட்டோவை தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார் விசிகவின் வன்னி அரசு. காலையில் இருந்து இந்த ட்வீட்தான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஜெய்பீம் படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும், சில சர்ச்சைகளும் தொடர்ந்தன.. அந்த வகையில், பாமக தரப்பு படத்தை கண்டித்தது.. படத்தில் நடித்த சூர்யாவுக்கும் மிரட்டல் விடுத்தது.

எனவே, சூர்யாவுக்கு திரை உலகம் சார்பாகவும், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாகவும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானிடம் ஜெய்பீம் குறித்த செய்தியாளர்கள் கேள்வியை சில தினங்களுக்கு முன்பு எழுப்பினர்..

 ஜெய்பீம் விவகாரம்... இயக்குநர் ஞானவேலின் விளக்கத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க..சீமான் ஜெய்பீம் விவகாரம்... இயக்குநர் ஞானவேலின் விளக்கத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க..சீமான்

கலகம்

கலகம்

அதற்கு சீமான், "நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது... அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.. அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்? அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்" என்றார்.

கருத்து

கருத்து

சீமானின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.. இதற்கு விசிகவின் வன்னி அரசும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.. இது தொடர்பாக அப்போதே ஒரு ட்விட் போட்டிருந்தார்.. அதில், "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மதவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானையே டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

சீமான்

சீமான்

அதுமட்டுமல்ல, சீமானுக்கு எதிராக #சாதி சாக்கடை சீமான் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தபோது, "திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்?" என்று வன்னி அரசு மீண்டும் அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பத்திரிகை

பத்திரிகை

இந்நிலையில், ஒரு பிரபல பத்திரிகை அட்டைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளது.. அதில், "எங்க போட்டோ, உங்க கமெண்ட்" என்ற தலைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், சீமானும் இருப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டுள்ளது.. வாசகர்களின் கருத்தையும் அதில் கேட்டிருந்தது. ஏதோ விழாவில் டாக்டர் ராமதாசும், சீமானும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள் போலும்.. ராமதாஸ் சேரில் உட்கார்ந்திருக்கிறார், அவருக்கு பக்கத்திலேயே மண்டியிட்டு கீழே உட்கார்ந்து சீமான் பவ்யமாகவும், மரியாதையாகவும் ராமதாசிடம் ஏதோ பேசி கொண்டிருக்கிறார்.. இது முன்னெப்போதோ எடுத்த பழைய போட்டோ என்றாலும், இன்றைய பரபரப்பு அரசியலில், இது பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

    Anbumani சமூகத்தின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலியும் நியாயமானது - Seeman
    போட்டோ

    போட்டோ

    வார பத்திரிகையில் வந்திருக்கும் இந்த போட்டோவைதான் வன்னி அரசு ஷேர் செய்து, ஒரு பதிவும் போட்டுள்ளார்.. அதில், "சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும் எவனும் சமத்துவத்தை படைக்க முடியாது"- தோழர் பெரியார்.. "கேட்டுச்சாண்ணே".. என்று பதிவிட்டுள்ளார். வன்னி அரசு இப்படி ஒரு ட்வீட் போட்டதுமே வன்னியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்து, பதில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.. மேலும், விசிகவையும் விமர்சித்து ட்வீட்களை பதிவிட்டு, வன்னி அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    VCK Vanni arasu has shared Naam Tamiliar party Seeman and PMK Founder Dr Ramadoss Photo and tweeted about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X