"குருமூர்த்தி சீடன்".. சாதிவெறிய பாருங்க, அப்டியாண்ணே.. போலி தமிழ்தேசியம்.. சீமானை சீண்டிய வன்னியரசு
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய, 2 வீடியோக்களை பதிவிட்டு, கிண்டலடித்துள்ளார் விசிகவின் வன்னியரசு.
Recommended Video
நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சில காலமாகவே கருத்து மோதல்கள் உள்ளன.. குறிப்பாக மேடையில் சீமான் செருப்பை எடுத்து காட்டியதில் இருந்தே இந்த மோதலும், எதிர்ப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.
அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி
சீமான் மீது விசிக சொல்லும் காரணம், ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் நபராக சீமான் இருக்கிறார் என்பதுதான்.

வன்னியரசு
உங்கள் இரு தரப்புக்கு இடையில் ஏன் இவ்வளவு தகராறு என்று ஒருமுறை விசிகவின் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் கேட்கப்பட்டது.. அதற்கு அவர், "பாஜகவின் அஜெண்டாவுக்குள் தான் சீமான் மற்ற கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் தமிழர் கட்சி என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகைச்சுவை பிரிவுதான்.. அதனால், பிழைப்பு வாதத்துக்காக பல விஷயங்களை சீமான் பேசி வருகிறார்... தமிழ் தேசியம் கருத்துகளை முன் எடுத்து செல்வதில் எங்களை போன்றவர்களுக்கு உண்டு. அதில் குழப்பம் செய்பவர்தான் சீமான், அதனால்தான் நாங்கள் அவரை கடுமையாக எதிர்க்கிறோம்.

ஆர்எஸ்எஸ்
மற்றபடி, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கும், வன்னியரசு, சீமான் ஆகியோருக்கு என்று தனிப்பட்ட பகைமை என்பது எதுவுமே இல்லை.. அவர்களின் கோட்பாட்டு புரிதல் அடிப்படையில் நாங்கள் எதிர்க்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டம், மதசார்பின்மை, சமூகநீதிக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை தான் நாம் தமிழர் கட்சி வேறு வடிவங்களில் முன் வைக்கிறது. 2012ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியானது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பேசுகிறது என்று அன்றே சொல்லி இருக்கிறேன். நான் ஒன்றும் அவரை போன்று மாமனார் சொத்து, பொண்டாட்டி சொத்தில் வாழவில்லை' என்று விளக்கம் தந்திருந்தார்.

2 வீடியோக்கள்
இதற்கு பிறகு பலமுறை சீமானின் கருத்தை விசிக விமர்சித்தே வந்துள்ளது.. இந்நிலையில், வன்னியரசு சீமானின் 2 மேடைப்பேச்சு வீடியோக்களை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அவைகள் எப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. மேடையில் சீமான் பேசியவைகளை கொண்டு, கிண்டலடித்து ட்வீட்களை பதிவிட்டுள்ளார் வன்னியரசு.

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்
முதல் வீடியோவில் சீமான் பேசியபோது, "உளவியலாக ஒரு விடுதலையை அடையணும் என் தம்பி தங்கைகளும், தமிழ்சமூக பிள்ளைகளும்.. நாம் தாழ்ந்தவர்கள் அல்ல.. தாழ்த்தப்பட்டவர்கள்.. இனி நிமிர வேண்டும்.. என்னை தாழ்த்த இவன் யார்? நம்ம தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் சொல்றார், எந்த சொல் உன் மீது இழி சொல்லாக சுமத்தப்படுகிறதோ, அந்த சொல்லை எழுச்சி சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை என்கிறார்.. யார் பறையன் என்று கேட்டால், நான்தான் என்று சொல்லி எந்திரிடா என்கிறார்.. நான்தான் பறையன்.. என்ன இப்போ? அந்த நிலைக்கு நீ உளவியல் விடுதலை அடைந்து நிமிராத வரை நீ முன்னேறவே முடியாது.. அப்படியே கிடக்க வேண்டியதுதான்" என்று அந்த வீடியோவில் பேசுகிறார் சீமான்.

போலி தமிழ்தேசியம்
இந்த வீடியோவை பதிவிட்ட வன்னியரசு, "சாதிவெறியை எப்படி தூண்டுகிறார் பாருங்க போலி தமிழ்தேசியம்!! என்று பதிவிட்டுள்ளார்.. இதற்கு சீமானின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பதிலடி தந்து வருகின்றனர்.. "இதுல என்ன குறை இருக்கு வன்னி? இதுவரை உங்களை நாங்கள் கேவலமாக பேசியது இல்லை.. அதற்கு என் அண்ணன் அனுமதிக்க மாட்டார் என்றும் சீமானை உங்க பின்தொடர்பாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு நன்றி அண்ணா" என்றும் கருத்துக்களை நாம் தமிழர் தம்பிகள் பதிவிட்டு வருகின்றனர்.

LIE - பொய்
இரண்டாவது வீடியோவில் சீமான் பேசியதாவது: "நான் மது அருந்த மாட்டேன்.. நான் பொய் சொல்ல மாட்டேன்.. நான் பிறர் பொருளை திருட மாட்டேன்.. கொள்ளையடிக்க மாட்டேன்.. ஊழல் செய்ய மாட்டேன்.. லஞ்சம் பெற மாட்டேன்.. கட்டிய மனைவியை தவிர, வேறு எந்த பெண்ணையும் கனவிலும் நினைத்து பார்க்க மாட்டேன்.. என்று பேசுகிறார்.. சீமான் இவ்வாறு சொல்ல சொல்ல, அங்கு அவருக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு மெஷினில் "LIE" (பொய்) என்ற வார்த்தை சிவப்பு விளக்கில் ஒளிர்ந்து செல்கிறது..

டேக்
இப்படி கிரியேட் செய்யப்பட்ட வீடியோவை வன்னியரசு ஷேர் செய்து, "அப்படியாண்ணே எல்லோரும் ஜோரா கைதட்டுங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.. அதைவிட முக்கியம், இந்த வீடியோக்களையும், ட்வீட்களையும் சீமானுக்கே டேக் செய்துள்ளார் வன்னியரசு.. இதற்கும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.