சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வெற்றிக்காக 38 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வேலை பார்த்த விசிக தொண்டர்கள்.. சபாஷ்!

திருமாவளவன் வெற்றிக்காக கூட்டணிக்கு விசிக தொண்டர்கள் உழைத்தார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பானை சின்னம்..! திருமாவளவனுக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களின் அளப்பரிய பங்கினை திமுக கூட்டணியில் பாராட்டியுள்ளார்களாம். அது உண்மைதான். இந்த தேர்தலில் அவர்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல!

    திமுக பக்கம் விசிக இருப்பதாகதான் பேச்சு.. ஆனால் அவ்வளவு சுலபமாக கூட்டணிக்குள் திருமாவளவனால் உள்ளே நுழைய முடியவில்லை. இதற்கு காரணம் துரைமுருகன்தான்!

    பாமகவை உள்ளே கொண்டு வர நிறையவே முயற்சி செய்தார். அப்போது அடிவயிற்றில் பகீர் என்றது திருமாவளவனுக்குதான்! அதனால் கூட்டணியை வேறு எங்காவது அமைக்கலாமா என்ற அளவுக்கு யோசித்தார். ஒருகட்டத்தில் திமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால் விசிக வெளியேறும் என்றும் பகிரங்கமாகவே சொன்னார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் கொஞ்சம் நிம்மதி ஆனார் திருமா!

    50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு 50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு

    ரவிக்குமார்

    ரவிக்குமார்

    அடுத்த பிரச்சனை சின்னம் தொடர்பானது. திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றாலும் சின்னம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. கொடுத்ததே 2 சீட்.. அதில் ரவிக்குமார் ஒரு சின்னம், திருமா ஒரு சின்னம் என ஆனது.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    தேர்தலுக்கு ஒரு மாதம்கூட இல்லாத நிலையில்தான் பானை சின்னம் வந்தது. ஆனால் முடிந்தவரை அதை பிரபலப்படுத்தினார் திருமா. அது மட்டுமில்லை.. திமுக கூட்டணி சம்பந்தமாக முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஒரு உத்தரவு பிறப்பிக்கவும், அதை மிகச்சரியாக கையாண்டார்கள் விசிக தொண்டர்களும்!

    தடுத்தார்கள்

    தடுத்தார்கள்

    சும்மா சொல்லக்கூடாது.. எல்லா தொகுதிகளிலும் விசிக தொண்டர்கள் கூட்டணி கட்சிக்காக இறங்கி வேலை பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட்டணி கட்சி கொடியை எதிர்க்கட்சியினர் அவிழ்க்க முற்படும்போது, சீறிப்பாய்ந்து அதை வீறு கொண்டு தடுத்தார்கள்.

    அரசியல் லாபம்

    அரசியல் லாபம்

    இத்தனைக்கும் "திமுக கூட்டணி சார்பாக திருமாவளவன் சிதம்பரம் தொகுதி தவிர வேறு எங்குமே பிரச்சாரம் செய்யப்படவில்லை. விசிக கொடிகள் திமுக கூட்டணி கொடிகளுடன் சேர்ந்து பறக்கவிடப்படவில்லை. திமுக ஆசிபெற்ற விசிக வேட்பாளர் என்றும் விளம்பரப்படுத்தப்படவில்லை.. வெறும் அரசியல் லாபத்துக்காகவே திருமாவளவனை ஸ்டாலின் கூடவே வைத்திருக்கிறார்" என்றெல்லாம் பாமக தரப்பில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டது.

    வேலை பார்த்தார்கள்

    வேலை பார்த்தார்கள்

    ஆனால் ஆயிரம் குறைகள் சொன்னாலும் இதை எதையுமே விசிக தொண்டர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. தந்தது 2 சீட்... அதிலும் ஒரே ஒரு இடத்தில்தான் விசிக நேரடி போட்டி.. அதனால் எப்படியாவது திருமாவளவனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றே அவர்களது எண்ணம் முழுவதும் இருந்தது. சுருக்கமாக சொல்லப்போனால், திருமாவளவன் வெற்றிக்காக அதாவது சிதம்பரம் என்ற ஒரு தொகுதி வெற்றிக்காக மீதமுள்ள 38 தொகுதிகளிலும் தொண்டர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    உழைப்பு

    உழைப்பு

    இதைதான் நேற்றுகூட ஸ்டாலினை சந்தித்து பேசிய கூட்டணி கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தார்கள். அதனால் இந்த தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற போகிறதோ தெரியாது.. ஆனால் அந்த வெற்றியில் முகமே தெரியாத விசிக தொண்டர்களின் உழைப்பு கலந்திருப்பதே உண்மை.. அதை யாராலும் மறுக்கவே முடியாது!

    English summary
    VCK Volunteers were working for the Thirumavalavan and DMK Coaliations victory in MP election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X