சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா? 3வது அணிக்கு போவீர்களா? திருமாவளவன் பொளேர் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடருவதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக இடையே இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை. இந்த நிலையில்தான் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று மதியம், அறிவாலயம் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. இதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. "அதை" நம்பி தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் திமுக.. பின்னணி

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

இந்த நிலையில், நிருபர்களிடம் திருமாவளவன் இன்று காலை கூறியதாவது: திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் பாஜக திட்டம். சசிகலா தனது அறிக்கையிலும் இதைத்தான் சொல்லியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்தேகம் வேண்டாம்

சந்தேகம் வேண்டாம்

திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி தொடருமா என்ற நிருபரின் கேள்விக்கு, "அதில் என்ன சந்தேகம்" என்றார் திருமா. பணிச்சுமை காரணமாக பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாமல், தடைபட்டிருந்தது. ஆனால், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்றார் அவர்.

 மூன்றாவது அணி

மூன்றாவது அணி

விடுதலை சிறுத்தைகள் மூன்றாவது அணியுடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு? "இது பொருத்தமில்லாத கேள்வி" என்று அவர் பதிலளித்துள்ளார்.

திருமாவளவன் திட்டவட்டம்

திருமாவளவன் திட்டவட்டம்

இதன் மூலம், திமுக கூட்டணியில் விசிக தொடரும், கமல்ஹாசன் தலைமையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் 3வது அணிக்கு போகாது என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

English summary
Viduthalai Chiruthaigal Katchi chief, Thol.Thirumavalavan says, his party is part of DMK alliance, no third front question will be arise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X