சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தோனி எனும் கிரிக்கெட் உலகின் சூப்பர் அரசன்".. சிஎஸ்கே பேன்ஸ் ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டியது!

Google Oneindia Tamil News

சென்னை: வேதாளன் என்பவர் ட்விட்டரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் திறமை குறித்தும், அவரது வியூகம் குறித்தும் சிறப்பாக அனாலிசிஸ் செய்து பதிவிட்டுள்ளார் அதனை இப்போது பார்ப்போம்.

"தோனி எனும் கிரிக்கெட் உலகின் சூப்பர் அரசன்👑

அப்படிப்பட்ட ஒரு batting pitch ஐ பார்த்த உடனே, டாஸில் வெற்றி பெற்றால் பண்ண எந்த கேப்டனா இருந்தாலும் பேட்டிங்க பர்ஸ்ட தான்

ஆனா தோனி மட்டும், இரண்டாவது பேட்டிங் ஆடும் போது மழை வர வாய்ப்பிருக்கு, ஓவர்ஸ் குறைய வாய்ப்பிருக்கு,..

Vedalan has posted a good analysis on CSK captain Mahendra Singh Dhonis ability and his strategy

டார்கெட் மாற வாய்ப்பு இருக்குன்னு சரியா கணிச்சு முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்காம பந்து வீச்சை தேர்வு பண்ணிட்டார்.

அது மட்டுமில்லாம நம்ம கிட்ட இருக்கும் weak bowling வச்சிக்கிட்டு எவ்வளவு பெரிய டார்க்கெட் செட் பண்ணாலும் அதை குறைஞ்ச over ல defend பண்ண முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு chasing தான். தோனியோட planஆ இருந்து இருக்கும்.

ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ண குஜராத்துக்கு எவ்வளவு target set பண்ணனும், எவ்வளவு target இருந்தா defend பண்ண முடியும் என்கிற idea இல்லாதது ஒரு drawback தான்.

மழையால ஆட்டம் பாதிக்கப்பட்டு இரண்டாவது நாளுக்கு ஆட்டம் போகும் போது, மழையால மாறும் ஆட்டத்தை எப்படி கொண்டு போகணும்னு தோனி யோசிச்சி plan பண்ண மாதிரி ஹர்திக் & குஜராத் plan பண்ணலைனு தான் நான் நினைக்கிறேன்.

ஷுப்மன் கில் பெரிய ஸ்கோர் அடிக்காம, சாய் சுதர்ஷன் பெரிய ஸ்கோர் அடிச்சதால 210+ score வந்துச்சு குஜராத்துக்கு.

பெரிய experience இல்லாத சாய் சுதர்ஷனே அடிக்கும். போது experienced CSK batters ஆல இந்த score கண்டிப்பா அடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சி.

ருத்துராஜ், கான்வே வழக்கம் போல செம்மையான ஓபனிங் ஸ்டார்ட் கொடுக்க, டூபே வழக்கத்துக்கு மாறா ஓடி ஓடியே ரன் எடுத்து ரன் ரேட் ஐ control ல வைக்க, ரஹானே quick fire innings ஆட, அடுத்து வந்த ராயுடு 13 ஆவது ஓவர்ல 6,4,6 அடிச்சு மேட்சை கிட்ட கொண்டு வந்து அவுட் ஆக, அடுத்து வந்த தல தோனி முதல் பால் லயே அவுட் ஆனது அவருக்கு மட்டும் இல்ல, அங்க இருந்த மொத்த கூட்டத்துக்குமே heart breaking ஆ இருந்து இருக்கும்.

2 ஓவர்ல 21 ரன் அடிக்கணும். 14 ஆவது ஓவர்ல ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாம வெறும் 8 ரன். கடைசி ஓவர்ல 13 ரன் அடிக்கணும். முதல் 4 பால்ல வெறும் 3 ரன். கடைசி ரெண்டு பால்ல 10 ரன் அடிக்கணும். ஜடேஜா ஒரு 6 ஒரு 4 அடிக்க கடைசி பால்ல த்ரில் வெற்றி. Final match ல தன்னோட முதல் பந்திலேயே அவுட் ஆனது தோனியை ரொம்பவே பாதிச்சு இருக்கும்.

குட்நியூஸ்? ஓய்வு பெறும் முடிவை தள்ளிப்போடுகிறாரா தோனி? உண்மை என்ன? இப்படி ஒரு காரணமா? குட்நியூஸ்? ஓய்வு பெறும் முடிவை தள்ளிப்போடுகிறாரா தோனி? உண்மை என்ன? இப்படி ஒரு காரணமா?

எல்லா ஆட்டங்களிலும் தன்னை மட்டுமே பார்க்க வந்த கூட்டத்துக்கு தன்னால தன்னோட அணியை வெற்றி பெற வைக்காம போயிடுமோனு emotional ஆன தோனியை நேத்து தான் நாம எல்லாரும் முதல் முறையா பார்த்து இருப்போம்.

ஒருவேளை, இந்த மேட்ச்ல தோனி டாஸ் தோத்து first batting செய்ய வேண்டிய நிலைக்கு கூட சென்னை அணி தள்ளப்பட்டு இருக்கலாம். ஆனா அப்படி ஒரு நிலைமை வந்து நாம பர்ஸ்ட் பேட்டிங் பண்ண வேண்டிய சூழலே வந்து இருந்தாலும், இந்த பவுலிங் யுனிட்டை வச்சிகிட்டே ஜெயிக்க அதுக்கும் ஒரு plan வச்சிருந்திருப்பாரு தல தோனி.

ஏன்னா, கிரிக்கெட்டின் எல்லா ஆட்ட நுணுக்கங்களையும் தெரிஞ்சவங்க ஒரு ஆயிரம் பேர் இருக்கலாம், ஆனா தோனி அளவுக்கு கிரிக்கெட்டை புரிஞ்சி வச்சிருக்கும் ஆள் வேற யாரும் இல்ல. எத்தனையோ ஆட்டங்களை தோனி வென்றெடுத்து இருந்தாலும், இந்த ஒரு ஆட்டம் மட்டும் தோனியின் அணியே அவருக்கு வென்று கொடுத்ததாக இருக்கட்டுமே." இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தோனியின் தனித்திறமை குறித்து பதிவிட்ட இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது.

English summary
Vedalan has posted a good analysis on CSK captain Mahendra Singh Dhoni's ability and his strategy on Twitter. Let's see it now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X