சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேதாரண்யத்தை 25 ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளி விட்ட கஜா புயல்.. வீடியோ #SaveVedaranyam

Google Oneindia Tamil News

Recommended Video

    வேதாரண்யத்தை புரட்டிப் போட்ட கஜா | பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் மூக்கு பகுதியில் உள்ள வேதாரண்யம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ச்சி பெறாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

    கஜா புடல் நாகப்பட்டினம் அருகே கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த புயல் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    பேயாட்டம் ஆடி விட்டு கரையை கடந்த கஜா.. பலி எண்ணிக்கை 49-ஆக உயர்வு! பேயாட்டம் ஆடி விட்டு கரையை கடந்த கஜா.. பலி எண்ணிக்கை 49-ஆக உயர்வு!

    உண்ண உணவின்றி

    கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வேதாரண்யமே குட்டித் தீவாக காட்சியளிக்கிறது. வெளியுலகத் தொடர்பின்றி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். உண்ண உணவின்றி, தொண்டையை நனைத்து கொள்ள தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

    தகவல் இல்லை

    நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை வரையிலான 20 கி.மீ பகுதியில் புயல் சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.

    மீட்பு பணிகள்

    மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள், ஓட்டு வீடுகள், கூரைகள் என்று சகலமும் புயலினால் சரிந்து கிடக்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     நிலை

    நிலை

    வேதாரண்யம் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் அவதிப்படுகின்றனர். நேற்று காலையுடன் மழை ஓய்ந்த நிலையில் இன்று கனமழை மீண்டும் பெய்து வருகிறது. இதனால் மேலும் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Vedaranyam becomes a small island of Tamilnadu. All the communication devices cut off.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X