சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல ஜீவஜோதி.. இப்போது வீரப்பன் மகளை கொத்திகொண்டு போன பாஜக.. சபாஷ் பரபரக்கும் தேர்தல் உத்திகள்!

Google Oneindia Tamil News

சென்னை: விசித்திரமான அரசியல் நடந்து வருகிறது.. விஜய்யை காங்கிரஸ் குறி வைக்கிறது.. ஜீவஜோதியை பாஜக குறி வைக்கிறது.. இரு தேசிய கட்சிகளின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.. இப்போது அடுத்தகட்டமாக பாஜக சந்தன கடத்தல் வீரப்பன் மகளை கட்சியில் இணைத்து கொண்டுள்ளது!

Recommended Video

    Tamilnadu BJP will strengthen IT wing| ஐ.டி.விங்கை பலப்படுத்தும் தமிழக பாஜக

    பாஜக - காங்கிரஸ்.. இதில் யாருக்குமே தனித்து நின்று டெபாசிட் வாங்கும் சக்தி கிடையாது.. என்றாலும், ஒருவரையொருவர் போட்டி போட்டு கொண்டு அரசியலை நகர்த்தி வருகிறார்கள்.

    சமீப காலமாக, பாஜகவில் ஏகப்பட்ட கவர்ச்சி முகங்கள் தென்பட தொடங்கி உள்ளன.. நடிகர்கள், நடிகைகள் எல்லா கட்சியிலும் இணைவார்கள், பிரச்சாரமும் செய்வார்கள் என்பது பொதுவான விஷயம்.. ஆனால் பாஜகவில் இந்த கவர்ச்சி நெடி சற்று கூடுதலாகவே உள்ளது.

    நான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தாநான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தா

    பாஜக

    பாஜக

    கடந்த தேர்தல்களில் டிக்டாக் பிரபலங்கள் உட்பட ஏராளமானோருக்கு சீட் தந்ததில் இருந்தே இது தெரியவருகிறது.. அதேபோல, அரசியல் பின்புலம் இல்லாத, அரசியல் அனுபவமும் அல்லாத, அதே சமயம் மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தங்கள் கட்சியில் இணைத்து கொண்டு வருகிறது. பிரபலம் என்று கணக்கில் கொள்ளுதே தவிர, எந்த வகையான பிரபலங்கள், எதன் மூலமாக இவர்கள் அனைவரும் பிரபலங்கள் ஆனார்கள் என்பதுதான் தெரியவில்லை.

    ஜீவஜோதி

    ஜீவஜோதி

    தமிழக பாஜகவை பொறுத்தவரை ஜீவஜோதி சமீபத்தில் இணைந்தார்.. அடுத்து ராதாரவி இணைந்தார்.. இயக்குநர் பேரரசு கூட இணைந்தார்.. இப்போது சந்தன கடத்தல் வீரப்பன் மகள் இணைந்துள்ளார். தமிழகம், கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களையும் அன்று ஆட்டி படைத்தவர் சந்தனக்கடத்தல் வீரப்பன். 20 ஆண்டுகளாக யானை தந்தங்களை கடத்தி சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்... போலீஸ், வனத்துறையினர் உள்ளிட்ட 180 பேரை கொன்றவர்.!

    இளைய மகள்

    இளைய மகள்

    இவரது 2 மகள்களில் ஒருவர்தான் வித்யா ராணி.. இவர்தான் பாஜகவில் இணைந்திருக்கிறார். கிருஷ்ணகிரியில் பாஜக மூத்த தலைவர் முரளிதரராவ் முன்னிலையில் இவர் அக் கட்சியில் இணைந்தார். வித்யா ராணி ஒரு வக்கீல்! வீரப்பனின் ​​இளைய மகள் பிரபாவதி விசிகவில் உள்ளதாக கூறப்படுகிறது.. இப்போது மூத்த மகள் பாஜகவில் இணைந்துள்ளார்.

    விசிக

    விசிக

    எம்ஏ இங்கிலீஷ் படித்து வரும் பிரபாவதி, விசிகவின் கொடியை பிடித்தபடி உள்ள போட்டோ இந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்போது பாஜகவில் இணைந்துள்ள வித்யாராணி, சர்ச்சில் திருமணம் செய்து கொண்டபோது, பல இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்த செய்திகளும் வந்ததாக சொல்லப்பட்டது.

    முரளிதரராவ்

    முரளிதரராவ்

    கட்சியில் இணைந்தது பற்றி வித்யாராணி சொல்லும்போது, "மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் எண்ணம்.. தப்பான வழியை தேர்வு செய்திருந்தாலும் சேவை செய்வதுதான் அவரது எண்ணமாக இருந்துது.. அதேபோல, மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால்தான் நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன்" என்கிறார். தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை வளர்த்து, தாமரையை மலர வைக்க அக்கட்சி பல முயற்சிகளை எடுத்து வருவதையே இது எடுத்து காட்டுகிறது!

    வீரப்பனை பாமக ஒரு காலத்தில் தூக்கிப் பிடித்தது. ஆனால் இன்று வீரப்பனின் புதல்வியர் இருவரும் ஆளுக்கு ஒரு கட்சி பக்கம் போய் விட்டனர். முத்துலட்சுமியின் நிலைப்பாடுதான் தெரியாத புதிராக உள்ளது.

    English summary
    veerappan daughter vidya rani joined in bjp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X