சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை லயோலா கல்லூரியில் நடந்த வீதி விருதுகள் திருவிழா! - வீடியோ

    சென்னை:" லயோலா கல்லூரியின் மாற்று ஊடக மையம் வருடம்தோறும் நிகழ்த்தும் வீதி விருதுகள் திருவிழா, சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்தது.

    மக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடக்கும் இந்த விழா தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்திருக்கிறது.

    Veethi Viruthu Vizha 2020: honours the Traditional artists with a recognition, Awards, Certificates

    இந்த விழாவில் தமிழகத்தின் 37 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.. இவர்களின் கார்னிவல் வகையறா வீதி ஊர்வலம், வள்ளுவர் கோட்டம் தொடங்கி லயோலா கல்லூரி வரை நடந்தது.

    விழா அரங்கில் மாணவிகளில் சாகச நிகழ்ச்சிகளும், மாணவர்களின் சாகச நிகழ்ச்கிளும் நடந்தது. பானை மீது ஏறி நடனமாடி பெண்கள் குழு அசரடித்தது. தப்பாட்டம், தலையில் கரகம் வைத்து சாகச நடனமும் கலைஞர்கள் ஆடினர். தலையில் முண்டாசு காட்டியபடி கலாச்சார உடையில் பலர் காணப்பட்டனர்.

    இந்த விழாவில் எழுத்தாளர்கள் பாலு மணிவண்ணனின் 'வெத்தல', மயிலை பாலுவின் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களின் வெளியீடு. கடந்த ஆண்டில் வெளியான 'அசுரன், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', ஒத்த செருப்பு' உள்ளிட்ட திரைப்படங்கள் மீதான உரையாடல்களும் இடம் பெற்றன. தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பல கலைஞர்களுக்கு வீதி விருது வழங்கி கௌரவித்தார்.

    English summary
    Veethi Viruthu Vizha 2020. This festival provides a platform for artists to showcase their Traditional Art forms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X