சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகன் அரசியலும் அம்பலமான வதந்தியும்.. பொய்யானது நாய்கறி பிரச்சாரம்.. பின்னணி என்ன?

சென்னையில் கைப்பற்றப்பட்ட 2100 கிலோ இறைச்சி முழுக்க ஆட்டுக்கறிதான் என்று உறுதியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிர வைக்கும் வேகன் அரசியல்... பின்னணி என்ன?- வீடியோ

    சென்னை: சென்னையில் கைப்பற்றப்பட்ட 2100 கிலோ இறைச்சி முழுக்க ஆட்டுக்கறிதான் என்று உறுதியாகி உள்ளது. இதற்கு எதிராக பரப்பப்பட்ட பல வதந்திகள் தற்போது பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சிதான் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. இது நாய்கறி கிடையாது என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே இந்த கறி அழுகி உள்ளது. மற்றபடி இதில் எந்த தவறும் கிடையாது என்று சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    இந்த பிரச்சனையின் பின்புலத்திலும், நாய்கறி வதந்தியிலும் நிறைய அரசியல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. முக்கியமாக வேகனிசம் எனப்படும் புதிய கலாச்சாரமும் பின்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு

    வேகன் அரசியல்

    வேகன் அரசியல்

    உலகம் முழுக்க வேகன் வாழ்வியல் முறை பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வேகன் வாழ்வியலில் எந்த விதமான தவறும் கிடையாது. முழுக்க முழுக்க வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே உண்பதைதான் வேகன் வாழ்வியல் என்கிறார்கள். ஆனால், இந்த வேகன் வாழ்வியல் தற்போது பெரிய அரசியலாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. உலகம் முழுக்க வேகன் மார்கெட்டிற்கு பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால், இதை பெரிதுபடுத்த பலர் வேலை செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே நடந்துள்ளது

    ஏற்கனவே நடந்துள்ளது

    உலகம் முழுக்க இந்த வேகன் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இது உலகின் மிகப்பெரிய உணவு சந்தையான அசைவ உணவு சந்தையை பெரிய அளவில் காலி செய்துள்ளது. வேகன் குறித்து வீடியோ, கருத்தரங்கு, கட்டுரைகள் என்று நிறைய எழுதி எழுதி பல கோடி மக்கள் நம்பி இருக்கும் அசைவ மார்க்கெட் படுத்தது. இதனால் பல நாடுகள் பெரிய இழப்பை சந்தித்தது. முக்கியமாக இந்தியாவின் அசைவ ஏற்றுமதியும் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அமெரிக்காவில் வேகனிசம் பெரிய சந்தையாகி உள்ளது.

    பிரச்சாரம் செய்தனர்

    பிரச்சாரம் செய்தனர்

    அதேபோல்தான் தமிழகத்தில், நாய்கறி என்று சின்ன வதந்தி வந்தவுடன், பலர் இந்த வேகன் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். அசைவ உணவுகளே இப்படித்தான், அதில் சுத்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் சென்னையின் அடையாளமாக இருந்த பல பிரியாணி கடைகள், அசைவ ஹோட்டல்கள் ஒரே வாரத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது.

    ஏன் இது தவறு

    ஏன் இது தவறு

    சைவ உணவு சாப்பிடுவதிலும், அதை வேகன் என்று பிரச்சாரம் செய்வதிலும் எந்த தவறும் கிடையாது, ஆனால் அசைவ உணவை பற்றி போலியான பிரச்சாரம் செய்யும் பழக்கம்தான் மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இந்தியாவில் பிரியாணியின் அடையாளமாக சென்னை திகழ்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த வியாபாரத்தை நம்பித்தான் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் இந்த தவறான வதந்தியால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

    அச்சத்தை உண்டாக்கியது

    அச்சத்தை உண்டாக்கியது

    இந்த பொய் பிரச்சாரமும், வதந்தியும் பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இது இறைச்சி விற்பனையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நாய்கறி வதந்தி முழுக்க முழுக்க பொய், அது ஆட்டுக்கறிதான் என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இறைச்சி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப வரும் என்று நம்பலாம்!

    English summary
    Vegan Politics and Dog meat Rumor: Finally the truth has came out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X