சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தக்காளி மட்டுமல்ல கத்தரி, வெண்டைக்காய் விலையும் உச்சம் தொட்டது கிலோ ரூ.110க்கு விற்பனை

தமிழகத்தில் காய்கறிகள் விலை உச்சம் தொட்டுள்ளது. கத்தரி, வெண்டைக்காய் என அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. தக்காளி மட்டுமல்ல கத்தரி, வெண்டைக்காய் என பல காய்கறிகள் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலையடைந்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை 3500 டன் வந்துள்ள நிலையில் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Vegetables price hike brinjal and ladyfinger sell for Rs. 110 per kg

சில்லறை விலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்ற தக்காளி நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100க்கும், மல்லி கிலோ ரூ.200 க்கும் விற்பனையானது.

வெண்டை 110
வெண்டைக்காய் 110/100
உஜாலா கத்திரிக்காய் 110/100
வரி கத்திரி 80/70
அவரை 90
பச்சைகுடமிளகாய் 75/70
வண்ண குடமிளகாய் 200/180
புடலை 60
பாவக்காய் 60
கோவைக்காய் 60
பீர்க்கன் 70
முட்டை கோஸ் 35
வெங்காயம் 34/30
நவீன் தக்காளி 75/65
நாட்டு தக்காளி 65/55
உருளை 32/26
சின்ன வெங்காயம் 65/50
ஊட்டி கேரட் 60/55
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 55/45
ஊட்டி பீட்ரூட் ஊட்டி 55
கர்நாடக பீட்ரூட் 35
சௌவ் சௌவ் 25/22
முள்ளங்கி 55
முட்டை கோஸ் 35
காராமணி 70
பாவக்காய் 60/50
புடலங்காய் 60/50
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 20/16
முருங்ககாய் .90/80
சேம கிழங்கு 20/15
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 60/50
இஞ்சி 60/30
பூண்டு 60/90/130
அவரைக்காய் 90/80
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 70/60
எலுமிச்சை 50
நூக்கள் 70
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 60
வாழைக்காய் 6/5
வாழைதண்டு 40
வாழைப்பூ 25
புதினா 6
கருவேப்பிலை 30
அனைத்து கீரை ஒரு கட்டு 30/25
தேங்காய் 1 காய் 34/36

 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

தொடர் மழை காரணமாக செடிகள் அழுக தொடங்கியதன் காரணமாக தான் காய்கறிகள் விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஏராளமானோர் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதால் அசைவம் தவிர்த்து சைவ உணவுக்கு மாறியதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்துள்ளது. காய்கறிகள் விலை குறையும் வரைக்கும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு, பட்டாளி, சுண்டல் என பல வகை குழம்புகளை வைத்து சமாளிக்காலம் என மனதை தேற்றிக்கொண்டுள்ளனர்.

English summary
Vegetable prices have peaked in Tamil Nadu. Housewives are facing severe inconvenience as all vegetables like aubergine and marrow are being sold at Rs. 110 per kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X