சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்வு.. கோயம்பேட்டில் அதிரவைக்கும் விலை விவரங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்வு.

    சென்னை: தமிழகத்தில் விளைச்சல் குறைவால் காய்கறிகள் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    தமிழகம் முழுவதுமே பெரிய வெங்காயம் விலை 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் விலை ரூ.100க்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் காய்கறிகளின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 40 முதல் 50 வரையும், கத்தரிக்காய் 35. முட்டைக்கோசு 13. பீன்ஸ் 35. கேரட் 50 ரூபாயில் இருந்து இருந்து 65 ரூபாய். முள்ளங்கி 8 ரூபாயில் இருந்து தற்போது 15 ரூபாய். வெண்டைக்காய் 25ல் இருந்து 40 ரூபாய்க்கு விற்கிறது.

    இப்படியுமா பிரச்சினை வரும்.. மோடி அரசுக்கு காத்திருக்கும் வெங்காய சவால்! இப்படியுமா பிரச்சினை வரும்.. மோடி அரசுக்கு காத்திருக்கும் வெங்காய சவால்!

    பீட்ரூட் விலை

    பீட்ரூட் விலை

    முருங்கைக்காய் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும் பீட்ரூட் 20ல் இருந்து 28 ரூபாய்க்கும் விற்கிறது.. பாகற்காய் 30ல் இருந்து 40 ரூபாய்க்கும் விற்கிறது. சாம்பார் வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 75 ரூபாய்க்கு விற்கிறது.

    எழுமிச்சை விலை

    எழுமிச்சை விலை

    வாழைக்காய் 2 ரூபாயில் இருந்து 6 ரூபாய் ஆகவும் சௌசௌ 8ல் இருந்து 12 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இஞ்சி 80ல் இருந்து 160க்கு உயர்ந்துள்ளது. எலுமிச்சை 30 ரூபாயில் இருந்து 50. ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

    கருணைக்கிழங்கு

    கருணைக்கிழங்கு

    சேனைக்கிழங்கு 20ல் இருந்து 30 ரூபாய் ஆகவு உயர்ந்து உள்ளது. தேங்காய் 16ல் இருந்து 30 ஆகவும் கருணைக்கிழங்கு 30ல் இருந்து 35 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.

    ஏன் அதிகரிப்பு

    ஏன் அதிகரிப்பு

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வரும் ஆனால் மகாராஷ்டிராவில் திடீரென பெய்த மழையால் வெங்க விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைவு காரணமாகவே வெங்காய விலை 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    உயர்வுக்கு காரணம்

    உயர்வுக்கு காரணம்

    இதேபோல் தமிழகத்தில் காய்கறிகளின் வரத்தும் குறைந்து போனதால் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 300 லாரிகளில் வந்த காய்கறிகள் வரத்து, தற்போது, 200 லாரிகளாக குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாகவே அவற்றின் விலையும் இப்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

    வீடியோ உதவி: அப்பாஸ்

    English summary
    Vegetables prices go up in Tamil Nadu, Koyambedu Market Vegetables Price Details here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X