சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது..?

    சென்னை: சென்னையில் வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான மின்சார ரயில் வழித்தடம் புத்துயிர் பெறுகிறது. 18 மாதத்தில் மின்சார ரயில் வழித்தடப்பணிகள் முடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் தாம்பரம்- சென்னை கடற்கரை, வேளச்சேரி - சென்னை கடற்கரை ஆகிய மின்சார ரயில் வழித்தடங்கள் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும்.

    இதில் சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடம் 2009 முதல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு சுமார் 11 ஆண்டுகள் ஆகியும் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான வழித்தட பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது.

    எம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்எம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்

    2007ல் துவங்கியது

    2007ல் துவங்கியது

    2007ம்ஆண்டு பணிகள் துவங்கிய நிலையில் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பணிகள் நிறைவு பெறுவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. வேளச்சேரி- பரங்கி மலை வழித்தடத்தில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் வரை பணிகள் நிறைவு பெற்ற போதிலும், அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலைத்திற்கு பணிகள் முடிப்பதில் நிலப்பிரச்சனையால் சிக்கல் நீடித்தது.

    தாம்பரம் கிண்டி மக்கள்

    தாம்பரம் கிண்டி மக்கள்

    இந்த பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் தாம்பரம் கிண்டி வழித்தடத்தில் உள்ள மக்கள் வேளச்சேரி பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றுபவர்கள் பூங்கா ரயில் நிலையம் வந்து மாறிச்செல்லும் நிலை இருந்தது.

    பிரச்சனைகள் தீர்ப்பு

    பிரச்சனைகள் தீர்ப்பு

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான மின்சார ரயில் வழித்தடம் புத்துயிர் பெறுகிறது. கிடப்பில் உள்ள 500 மீட்டர் பணிகளை முடிக்க இதுவரை தடையாக இருந்த நிலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தெற்கு ரயில்வே சரி செய்துவிட்டது.

    18 மாதத்தில் நிறைவு

    18 மாதத்தில் நிறைவு

    இதையடுத்து தெற்கு ரயில்வே அண்மையில் கிடப்பில் உள்ள பணிகளை முடித்து புதிய ரயில்வே லைன் அமைக்க 48.48 கோடி மதிப்பீட்டில் ஏலம் விட்டுள்ளது. எனவே 18 மாதத்தில் மின்சார ரயில் வழித்தடப்பணிகள் முடிந்து வேளச்சேரி பரங்கிமலை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்..

    ஐடி பணியாளர்கள்

    ஐடி பணியாளர்கள்

    வேளச்சேரி -பரங்கிமலை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டால் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பயண நேரங்கள் வெகுவாக குறையும். ஐடி பணியாளர்கள் பலரும் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகம் செல்ல விரும்புவார்கள்.

    English summary
    After being delayed for nearly 11 years, construction of 500-metre elevated rail line between Chennai Adambakkam and St Thomas Mount is set to resume soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X