சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் கிடைத்தும்.. துரைமுருகனுக்கு மகிழ்ச்சி இல்லையாமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் கிடைத்தும், துரைமுருகனுக்கு மகிழ்ச்சி இல்லையா?

    சென்னை: திமுகவில் வேலூர் தொகுதி தனது மகனுக்கு ஒதுக்கப்பட்டது உருதியானபின்னரும் துரைமுருகன் மகிழ்ச்சியாக இல்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.

    வேலூர் தொகுதியை கடந்த மக்களவைத் தேர்தலின்போதே தனது மகனுக்காக கேட்டுவந்தார் துரைமுருகன். ஆனால் அப்போது அந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கபப்ட்டது. இதனால் துரைமுருகன் கடுப்பில் இருந்ததாகவும் அந்த தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல உள்ளடி வேலைகள் நடந்ததும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

    இந்நிலையில் இந்த முறை வேலூர் தொகுதியை தனது மகனுக்கு கொடுக்க வேண்டும் என்று அப்போதிருந்தே துரைமுருகன் கேட்டுவந்தார். இப்போது தொகுதி அவரது மகன் கதிருக்கு என கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்றே அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக துரைமுருகனும் வேலூருக்கு செல்லும்போது அந்த தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியினர். கூட்டணி கட்சியினர் என்று பலதரப்பட்டோரையும் பார்த்து ஆதரவு கேட்டு வந்தார்.

    அத்தனை அரசியல்வாதிகளும் இவரைச் சுற்றி.. பரபரக்கும் ராமநாதபுரம்.. யார் இந்த தேவசித்தம்! அத்தனை அரசியல்வாதிகளும் இவரைச் சுற்றி.. பரபரக்கும் ராமநாதபுரம்.. யார் இந்த தேவசித்தம்!

    செங்குட்டுவன்

    செங்குட்டுவன்

    கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட A.C. சண்முகம் 324326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தையும் ஏற்கனவே அந்த தொகுதியின் சிட்டிங் எம்.பியாக இருந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 205896 வாக்குகளை பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ஏசிஎஸ்

    ஏசிஎஸ்

    பாஜக கடந்த முறை ஒரு பலவீனமான கூட்டணியே அமைத்திருந்தது. அந்த கூட்டணியில் வேலூர் தொகுதியை பொருத்தமட்டில் பாமக மட்டுமே கொஞ்சம் வலுவான வாக்கு வங்கியை வைத்திருந்த கட்சி அப்போதே பாஜக சார்பில் போட்டியிட்ட A.C. சண்முகம் 63393 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பை பறிகொடுத்திருந்தார். பலவீனமான கூட்டணியில் இருந்தாலும் அவர் 324326 வாக்ககுகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதற்கு அவர் பணத்தை தண்ணீராக செலவழித்ததும் ஒரு காரணம்என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்போதும் வேலூர் தொகுதியில் A.C. சண்முகம் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    பணம் இறங்குகிறது

    பணம் இறங்குகிறது

    இந்த முறை அதிமுக, பாஜக, பாமக என்று பெரும்பலத்தொடு A.C. சண்முகம் களம் இறங்கவுள்ளார். அதோடு தொகுதியில் அவர் பெரிய அளவில் பணம் செலவழிப்பார் என்றே கருதுகிறார்கள். இந்த இடத்தில்தான் துரைமுருகன் கவலையடைந்தாராம். அதாவது பெரும்படையுடனும் பெரும்பணத்துடனும் A.C. சண்முகம் களம் இறங்கும்போது தன்னால் அவருக்கு இணையாக பணம் செலவழிக்க முடியாது என்று கருதுகிறாராம்.

    நிதி தருக

    நிதி தருக

    இதனால் ஸ்டாலினை சந்தித்த அவர் கட்சி சார்பில் தனது மகனின் தேர்தல் செலவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். A.C. சண்முகம் பெரிய அளவில் பணத்தை செலவழிப்பார் ஆகவே அவரை சமாளிக்க நிதியுதவி செய்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று ஸ்டாலினிடம் துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் கட்சியின் பொருளாரான உங்களுக்குத்தான் கட்சியின் நிதி நிலை நன்றாக தெரியும். ஆகவே கட்சியின் இப்போதைய நிலையில் கட்சியில் இருந்து உங்களுக்கு பணம் செலவழிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ஸ்டாலின்.


    இதை எதிர்பார்க்காத துரைமுருகன் தனது மகன் கதிருக்கு போராடி வேலூர் தொகுதியை வாங்கிய பிறகும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறாராம்.

    English summary
    DMK leader Duraimurugan is upset over the funding for his son's campaign in Vellore LS constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X