சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.

விடுதலைப் போராட்ட வீரரும் தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

vellore election: Advisory meeting headed by Chief Minister Palanisamy

இதனைத் தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆம்பூர் - கே.பி. முனிசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியாத்தம் - வைத்திலிங்கம், அமைச்சர் தங்கமணி, வேலூர் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கே.வி.குப்பம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அணைக்கட்டு - அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் வாணியம்பாடி - அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 71 பேரை கொண்ட குழுவை திமுக நியமித்த நிலையில் அதை விட 2 மடங்கு கூடுதலாக அதிமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Vellore Lok Sabha Constituency Election: Advisory meeting headed by Chief Minister Palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X