• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தட்டி தூக்கிய பாஜக.. வேலூர் இப்ராஹிமுக்கு தேசிய அளவில் பதவி.. செம குஷியில் ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிம், பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.. இந்த அறிவிப்பை பாஜக தலைமை வெளியிட்டுள்ளதையடுத்து, இப்ராஹிம் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுக்கு, 6 துணை தலைவர்கள், 3 பொது செயலர்கள், 7 செயலர்கள் மற்றும் பொருளாளர் அறிவிக்கப்பட்டனர்.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

இதில், தமிழகத்தை சேர்ந்த வேலுார் இப்ராஹிம் என்று அழைக்கப்படும், சையது இப்ராஹிம் சிறுபான்மைப் பிரிவு, தேசிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாஜக

பாஜக

இப்ராஹிம் சிறந்த பேச்சாளர்.. பாஜகவின் ஆதரவாளர் ஆவார்.. தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் என்ற அமைப்பை துவக்கி, பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் செய்தவர்.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளை மையப்படுத்தி தீவிர பிரச்சாரம் செய்தார்.!

விசிக

விசிக

இவருக்கும் விசிகவுக்கும் எப்போதுமே ஆகாது.. பலமுறை கொள்கை ரீதியாக திருமாவளவனை விமர்சித்தவர் இப்ராஹிம்.. "இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும், திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர்... இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை..." என்று ஆவேசமாக சொன்னவர்.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த முறை, பிரச்சாரத்துக்கு திண்டுக்கல் சென்றிருந்தபோதுகூட, நாம் தமிழர் கட்சியும் மனித நேய மக்கள் கட்சியும் இப்ராஹிமுக்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேலூர் இப்ராஹிமுக்கு பாஜவில் தேசிய பதவி தந்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.. மற்றொரு பக்கம் பாஜகவினரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. சிறுபான்மையினர் நலம் காக்க பாஜக எடுத்துவரும் முயற்சிகளுள் ஒன்று என்று இதுகுறித்து பதிவிட்டும் வருகின்றனர்.

வரவேற்பு

வரவேற்பு

தனக்கு கிடைத்த பதவி குறித்து குறித்து இப்ராஹிம் சொல்லும்போது, "பாஜகவுக்கு எதிராக நின்றால்தான் பாதுகாப்பு என்ற மனநிலையில் சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அது உண்மையில்லை என்பதையும் இந்துத்துவா சித்தாந்தம் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களுக்கு எதிரானதொரு மாயை என்பதையும் மக்களிடம் தெளிவுப்படுத்துவோம், தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரசாரம் செய்யவும், கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த பொறுப்பு பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்..!

திமுக

திமுக

அதுமட்டுமல்ல, திமுகவின் எதிர்ப்பையெல்லாம் பார்த்து பயப்படறவங்க நாங்க கிடையாது.. திமுக ஒரு நல்ல கட்சி, கடந்த காலங்களில் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்தெல்லாம் மக்கள் ஓட்டுப்போடவில்லை.. 10 வருஷமாக ஒரே கட்சி நீடித்துவந்ததால், ஆட்சி மாற்ற மனநிலையில்தான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.. தமிழகத்தில் பாஜக இன்னும் அதிகமாக காலூன்றும்" என்றும் சொல்கிறார் இப்ராஹிம்..

English summary
Vellore Ibrahim gets National level post in BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X