சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது.. முதலமைச்சர் பழனிசாமி கருத்து

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம்... தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது.. முதல்வர் பழனிசாமி கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்துசெய்து உத்தரவு

    சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 38 தொகுதிகளுக்கு மட்டுமே, வியாழக் கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

    Vellore loksabha election should not have been canceled, Chief Minister Palanisamy commented

    தேர்தல் ரத்து குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த விதத்தில், தேர்தல் ஆணையம் முழுமையாக ஆராய்ந்தே வேலூரில் தேர்தலை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து பழக்கப்படுத்தியது திமுக தான் என்றும் அதிலும் தோல்வி அடைந்து இருப்பதாக விமர்சனம் செய்தார்.

    பணம் கொடுத்து ஜனநாயகத்தை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்று திமுகவை சீண்டிய அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயகத்தில் அதிகநம்பிக்கை கொண்டுள்ளது அதிமுக என்றார். வேலூர் தொகுதி தேர்தல் ரத்து, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார். பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    வேலூரையடுத்து அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு வேலூரையடுத்து அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு

    இந்தநிலையில், வேலூர் தேர்தல் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார். இருப்பினும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தும், முதலமைச்சர் பழனிசாமியின் கருத்தும் மாறுப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    English summary
    Chief Minister Palanisamy Said That Vellore election should not have been canceled
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X