சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்னி குண்டத்தில் சிக்கி தவிக்கும் திருத்தணி, வேலூர், மதுரை, கரூர்.. 107 டிகிரி F.. மக்களே உஷார்

Google Oneindia Tamil News

சென்னை: திருத்தணி, வேலூர், மதுரை, கரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டு செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Heat temperature Update | 'Red Alert' For Several Parts ?

    கோடை காலத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி 117 டிகிரி பாரன்ஹீட் வரை செல்வதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் தகிக்கும் வெப்பம் மிரட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னை வானிலை மையம் தமிழகத்தின் சில இடங்களில் எந்த அளவுக்கு வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி... டிடிவி தினகரன் குற்றச்சாட்டுமணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    மதுரை

    மதுரை

    அதன்படி அதிராமபட்டினத்தில் 95.9 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் கோவையில் 99 டிகிரி வெப்பநிலையும் தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகும். அது போல் மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

    அதிகபட்சம்

    அதிகபட்சம்

    நாகையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும், பாளையம்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டும் தஞ்சை, திருச்சி, திருத்தணி ஆகிய பகுதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அது போல் வேலூரிலும் அதிகபட்சமாக 107.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

    மின் பயன்பாடு

    மின் பயன்பாடு

    வேலூர், திருத்தணி, தஞ்சை, சேலம், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலையாக 102 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கண்ணை பறிக்கும் அளவுக்கு வெப்பம் இருக்கும். அண்மையில் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.

    மின் கட்டணம்

    மின் கட்டணம்

    24 மணி நேரமும் ஃபேன் ஓடியது ஓடியபடியே இருக்கிறது. மேலும் வீட்டு ஏசிக்களும் இரவு நேரத்திலும் முழுவதும் ஓடுகிறது. இதனால் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டிய அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து வருவதால் வழக்கமான கோடையை விட மின்கட்டணம் எகிறும் நிலை உள்ளது. அதே வேளையில் அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் மின் கட்டணம் குறையும் நிலை உள்ளது. கொரோனா ஊரடங்கால் பணியில்லாமலும் ஊதியம் இல்லாமலும் மின் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என விழிபிதுங்கி நிற்கின்றனர் தமிழக மக்கள்.

    English summary
    Vellore, Tiruthani, Karur sizzles at hot with a high temperature of 107 degree Fahrenhiet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X