சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த பாலியல் கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை.. வேல்முருகன் காட்டம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "பொள்ளாச்சி பாலியல் செய்த கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை" என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மதுரையில் ராகிங் கொடுமை.. விஷம் குடித்த இரு கல்லூரி மாணவர்களில் மேலும் ஒருவர் பலி மதுரையில் ராகிங் கொடுமை.. விஷம் குடித்த இரு கல்லூரி மாணவர்களில் மேலும் ஒருவர் பலி

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

அதில், "பொள்ளாச்சி தொடர்பான விசாரணையில் அதிமுக அரசு நேர்மையாக விசாரணையை மேற்கொள்ளும் என நம்பமுடியாது. அதனால் நீதிமன்றமே நேரடியாக முன்வந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும்" என்ற கோரிக்கை வைத்து அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

வீடியோ

வீடியோ

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தவுடன் தன் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று பேசி வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியுள்ளதாவது:

கடும் தண்டனை

கடும் தண்டனை

"பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஒரு கும்பல். அவர்கள் உயிரோடு இருக்கவே தார்மீக உரிமை கிடையாது. இந்த கொடூர சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்" என்றார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "டிடிவி தினகரன், நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார். ஆனால் நான் போகவில்லை. அவர் மட்டுமில்லை.. என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சியினர் என்னை அழைத்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.

English summary
Tamilaga Vazhvurimai katchi Velumurugan says about TTV Dinakarn's alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X