சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு நிதி கொடுக்காத போது... மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா..? -வேல்முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு போதிய நிதி கொடுக்காத போது, மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கூட பெறமுடியாமல் அதை பெறுவதற்கு போராட வேண்டியுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்புதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

கண்ணும் கருத்தும்

கண்ணும் கருத்தும்

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக இது 4ஆவது பொது முடக்கம் (ஊரடங்கு). இதில் ஒவ்வொரு ஊரடங்கின்போதும் கொரோனா பெருகியபடி உள்ளது என்பதுதான் உண்மை நிலை. இதனால் அறிவியலாளர்கள், சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருவித திகைப்பும் இல்லாமலில்லை.

நிதி முக்கியம்

நிதி முக்கியம்

அந்தத் திகைப்புக்குக் காரணம், "ஊரடங்கு, சமூக விலகல், தனித்திருத்தல், முகக்கவசம் அணிதல், பரிசோதனைகள் எனக் கறாராக இருந்தும், கொரோனா தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான்." இது ஒருபுறமிருந்தாலும், மிக முக்கியம் நிதிதான். இதில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை, நிதிப்பாக்கியைக் கூட கொடுத்தபாடில்லை.

42 விழுக்காடு

42 விழுக்காடு

ஒன்றிய அரசுக்கான நிதி என்பது, மாநிலங்களின் வரி வருவாய் அனைத்தும் ஒன்றிய அரசுக்குச் செல்வதுதான். அதிலிருந்துதான் 42 விழுக்காட்டை மாநிலங்களின் பங்காகக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. இது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதைதான். ஒன்றிய அரசு என்ற ஒன்று இல்லாமல் மாநிலங்கள் தனியாகவே இயங்க முடியும்; ஆனால் மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு என்ற ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை என்பதுதானே உண்மை!

சிதம்பரம் ட்வீட்

சிதம்பரம் ட்வீட்

நமது காசை ஒன்றிய அரசுக்குக் கொடுத்துவிட்டு, அதில் பாதிக்கும் குறைவான காசை யாசகம் கேட்பதுபோல் கேட்பது என்றால், அது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையல்லாமல் வேறென்ன? முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், "மோடியின் சுயசார்பு (?) திட்ட அறிவிப்புகள் ஏழை எளியவர், புலம்பெயர் மக்கள், தினக்கூலிகள், வேலையிழந்தோர் ஆகியோருக்கு பயன் அளிக்காது எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
velmurugan asks, central government does not provide the funds, Corona eradication is possible?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X