சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி ஏன் நிஜ வாழ்க்கையிலும் இப்படி நடிக்கிறார்?.. வேல்முருகன் கடும் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு.. ரஜினிகாந்த்- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் பேட்டி கொடுத்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். நேற்று அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

    Velmurugan condemns Rajinikanth after his comment on Rajiv murder convicts

    அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன், என்று கூறியுள்ளார்.

    பலர் ரஜினிக்கு எதிராக இதனால் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவரின் இந்த கருத்து பெரிய விவாதத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில் ரஜினியின் பேட்டிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினி மக்களை ஏமாற்றுகிறார் என்று வேல்முருகன் பேட்டியளித்துள்ளார்.

    அவர் தனது பேட்டியில், ரஜினி திரையில் நடிப்பது போல் நடிக்கிறாரா?. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார் என்று தெரியாதது போல ரஜினி நடிக்கிறார்.

    ரஜினிகாந்த் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். தமிழர்களின் அடிப்படை பிரச்சனை கூடவா அவருக்கு தெரியாமல் இருக்கும்.

    தமிழகத்தின் பல பிரச்சனைக்கு ரஜினி செவிசாய்க்கவில்லை. பச்சை தமிழன் என்று பேசிவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்ய போகிறார் ரஜினி என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

    English summary
    Velmurugan condemns Rajinikanth after his comment on Rajiv murder convicts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X