சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது, சரியானது.. வேல்முருகன் தில் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: கடைசியில் தனித்து போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டார் வேல்முருகன்!

கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே தமிழக மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். இதற்காக நிறைய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக வட மாவட்டங்களில் இவருக்கு செல்வாக்கு அதிகம்.

இந்நிலையில் தேர்தல் சமயம் நெருங்குவதால், கூட்டணி வைத்து போட்டியிடலாம் என முடிவெடுத்திருந்தார் வேல்முருகன்.

சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி

தனித்து போட்டி

தனித்து போட்டி

குறிப்பாக டிடிவி தினகரனுடன் கை கோர்க்கலாம் என்று யோசித்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியல, திடீரென்று தனித்துபோட்டி என அறிவித்துவிட்டார் வேல்முருகன்.

உடம்பு சரியில்லை

உடம்பு சரியில்லை

அக்கட்சியின் மாநில சிறப்பு பொது குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 10-ம் தேதி இரவு நடைபெற்றது. ஆனால் வேல்முருகனுக்கு உடம்பு சரியில்லை. அதனால் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தாலும். தொலைபேசி மூலம் மக்கள் மத்தியில் பேசினார்.

2 சதவீத வாக்கு

2 சதவீத வாக்கு

அப்போது அவர் சொல்லும் போது, "தரப்போகும் ஒரு தொகுதிக்காக யாரிடமும் யாசகம் கேட்கும் நிலையில் நாம் இல்லை. 2 சதவீத வாக்கு உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போகிறார்கள்.

தனித்து போட்டி

தனித்து போட்டி

சீமான், சரத்குமார், கமல்ஹாசன் எல்லோரும் தனித்து நிற்கின்றனர். நாமும் தனித்து நிற்கக்கூடாதா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. அதனால் நாமும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிப்போம்" என்றார். ஆக மொத்தம் வேல்முருகனும் தனித்து போட்டி என்பது கன்பார்ம்ட்!

English summary
Tamizhaga Vazhvurimai katchi has annnounced contest alone in MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X