• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"200".. ஸ்டாலினிடம் "ரிப்போர்ட்" தந்தேன்.. இனி ஓட்டு எண்ணுவது மட்டும் பாக்கி.. வேல்முருகன் உறுதி

|

சென்னை: "திமுகவின் தலைமையிலான இந்த மதச்சார்பற்ற மாபெரும் வெற்றி கூட்டணி தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும்.. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி" என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  ஸ்டாலினை சந்தித்தது எதனால் ? தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன் பேட்டி | Oneindia Tamil

  கடந்த எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்த முறையும், தேர்தலில் தங்கள் ஆதரவை திமுகவிற்கு அளித்திருந்தனர்..

  அத்துடன், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பண்ருட்டியில் வேல்முருகன், திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.. இதுவரை வெளிவந்த கருத்து கணிப்பில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகனுக்கு சாதகமான முடிவுகளே வந்துள்ளன.

  பண்ருட்டி

  பண்ருட்டி

  இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் சொன்னதாவது: "திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தேன்.. என்னுடைய பண்ருட்டி தொகுதி உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளின் நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்தும், தமிழகம் அளவில் திமுகவின் வெற்றி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகளை குறித்து மனம் விட்டு சில விஷயங்களை பேசினேன்.. அந்த வகையில் திமுகவின் தலைமையிலான இந்த மதச்சார்பற்ற மாபெரும் வெற்றி கூட்டணி தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும்.

  ஸ்டாலின்

  ஸ்டாலின்

  ஸ்டாலின் முதல்வராவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக, எனக்கு தெரிந்த ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், தேர்தல் களத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்ட அடிப்படையில் சொல்கிறேன், கண்டிப்பாக மத்திய பாஜகவின் அடிமை அரசாக தமிழ்நாட்டில் உரிமைகள் அனைத்தையும் காவு கொடுத்த இந்த எடப்பாடி அரசு அகற்றப்படும்..

  சட்டங்கள்

  சட்டங்கள்

  கண்டிப்பாக ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. சமூக நீதி பின்பற்றப்படும்.. மதவாத சக்திகளுக்கு இடமிருக்காது.. நீட் போன்ற பாழாய்போன சட்டங்கள் திரும்பி பெறப்படும். மக்கள் எதிர்த்த பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும்.. இதெல்லாம் நடக்கும் என்று காத்திருக்கிறேன்.. இதெல்லாம் ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்ந்தால்தான் நடக்கும்.. இந்த முறை, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.. நாட்கள் கடந்து போக வேண்டும்.. வாக்குகள் மட்டும்தான் எண்ணப்பட வேண்டியதுதான் பாக்கி இருக்கிறது.

  அரக்கோணம்

  அரக்கோணம்

  அரக்கோணத்தில் நடந்தது மாபெரும் பச்சை படுகொலை.. எந்த ஒரு மனிதர்களும் அதை சமன்படுத்துவதற்கோ, அல்லது ஒருவேளை அதை நியாயப்படுத்துவதற்கோ முன்வரக்கூடாது.. அப்படி அந்த கொலைகளை நியாயப்படுத்த முன்வந்தால் அது மோசமான பச்சை படுகொலை.. பைத்தியக்காரத்தனம்... கொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைதாக வேண்டும். அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், அந்த கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவருமான மகன்கள்தான் இதில் ஏ1, ஏ2, ஏ3 குற்றவாளிகள்..

   சிறப்பு கோர்ட்

  சிறப்பு கோர்ட்

  இதில் இருந்து அதிமுகதான் இந்த கொலையை செய்திருக்கிறது என்பது தெரிகிறது.. எனவே, அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் வேண்டுகோள். ஜாதீய மோதல், மத மோதல்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் கும்பல்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால், சிறப்பு நீதிமன்றங்கள் இதை விசாரித்து உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்.. அப்போதுதான் தமிழகம் அமைதியாக விளங்கும்" என்றார்.

  English summary
  Velmurugan says about Panruti constituency and DMK alliance
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X