சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் எப்போதுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.

கொரோனாவுக்கு முன்பே 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், ஆனால் பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மேல் பழிபோட்டு தப்ப பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல் தமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்

கண்டனம்

கண்டனம்

கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்!இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பொருளாதார மீட்பு

பொருளாதார மீட்பு

"கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்!" டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக இப்படிப் பேசினார் மோடி. ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்' என்ற தலைப்பின் தொடக்கவுரையில் இவ்வாறு பேசிய அவர், "கொரோனா அச்சுறுத்தலுக்கிடையிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது" என்றுவேறு மார்தட்டிக் கொண்டார்.

ஆத்திரம் வருகிறது

ஆத்திரம் வருகிறது

மோடியின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. காரணம், பிரதமராக அவரது நடவடிக்கை எதுவுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை. கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே இருந்தது, இருக்கிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பெருமுதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்குக் கம்பிநீட்டியது மோடி ஆட்சியில்தான். வாராக்கடன் பல நூறு லட்சம் கோடிகளை கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்ததும் மோடி அரசுதான்.

பொருளாதார வீழ்ச்சி

பொருளாதார வீழ்ச்சி

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு, குறு, உறு தொழில்களையெல்லாம் அழித்து வேலையின்மையையும் விலையுயர்வையும் பெருக்கி, பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கே தள்ளினார். அதனால்தான் கொரோனாவுக்கு முன்பே கடந்த 8 காலாண்டுகளாக படிப்படியாக சரிந்து 3.2 விழுக்காடாக ஆனது பொருளாதாரம். இதைப் பொருளாதார நிபுணர்களும் பன்னாட்டு நிதியமும் (International Monetary Fund - IMF) கூட உறுதி செய்தனர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்! இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன?

இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
velmurugan says, pm modi actions were not welfare for the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X