சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தால் தீவிரவாதியா..? மத்திய அரசு மீது பாயும் வேல்முருகன்..!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தால் தீவிரவாதி முத்திரை குத்துவதா என மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.

Recommended Video

    கள்ளக்குறிச்சி: பொய் வழக்கை உடைத்து எறிவேன்… வேல்முருகன் பரபரப்பு பேட்டி!

    புதிய வேளாண் சட்டத்தை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    இலங்கை கடற்படையால் 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் இலங்கை கடற்படையால் 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

     விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக, மோடி அரசும், பாஜக நிர்வாகிகளும் பேசி வருவது கண்டனத்துக்குரியது குறிப்பாக, விவசாயிகள் அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை, உண்மையில் வெளிநாட்டு சக்திகளுக்காக செயல்படுவதாகவும், தேசவிரோதிகளின் அமைப்புகள் எனவும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார் அமைச்சர் கமல் பட்டேல்.

    இழிவுப்படுத்தல்

    இழிவுப்படுத்தல்

    மத்திய இணையமைச்சர் ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே, டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மறைமுகமாகச் செயல்பட்டு வருவதாக கூறி, விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ளார். இன்னொரு படி மேல் போய், விவசாயிகளுடன் மாவோயிஸ்ட், நக்சல், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று கூறி, விவசாயிகள் போராட்டத்தை மேலும் இழிவுப்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

    துணை ராணுவம்

    துணை ராணுவம்

    இதனிடையே, பெயரளவுக்கு பேச்சுவார்த்தைகளை மட்டும் நடத்திவிட்டு, மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. துணை ராணுவத்தை இறக்கியதோடு மட்டுமில்லாமல், சாலைகளில் முள்வேலிகள், ட்ரோன் மூலம் கண்காணிப்பு என போராட்டத்தை எப்படியாவது வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது.

    த.வா.க. ஆதரவு

    த.வா.க. ஆதரவு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. அப்போராட்டத்தில், நானும் கலந்து கொள்கிறேன். எனேவ விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    English summary
    Velmurugan support Dmk hunger strike on dec 18 friday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X