சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீழடியில் அருங்காட்சியம்- பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட ஸ்டாலின்! | Stalin today visited the Keezhadi Excavation

    சென்னை: கீழடியில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும்; அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    Velmurugan urges to set up Museum at Keezhadi

    கீழடி அகழாய்வின் முதல் கட்டத்திலேயே அரிய பல உண்மைகள் தெரியவந்தன. ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் 2 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் 2017 பிப்ரவரியில் ஓர் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "நகரிய நாகரிகத்திற்கான தடயங்கள்-கட்டுமானங்கள் முதல் முறையாகக் கிடைத்திருக்கின்றன" எனச் சொல்லியிருந்தார். அவ்வளவுதான், உடனடியாக அவரை அங்கிருந்து தூக்கியடித்தது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு. அவருக்குப் பதிலாக சிறிராமன் என்பவரைப் பணியமர்த்தியது. சிறிராமனோ, "மேற்கொண்டு எந்தத் தடயங்களும் அகப்படவில்லை" என்று ஒரே பக்க அறிக்கை அளித்தார். அத்தோடு தனது மூன்றாமாண்டு ஆய்வினை முடித்துக் கொண்டு கீழடியையே காலி செய்தது ஒன்றிய தொல்லியல் துறை.

    இதனைத் தமிழகமே ஒருசேர எதிர்த்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன; "அமர்நாத் இராமகிருஷ்ணனை மீண்டும் கீழடியில் அமர்த்து!" என்று முழங்கின. ஆனால் அதிமுக அரசும் சரி, அதன் அத்துறைக்கான தற்போதைய அமைச்சர் மாபா பாண்டியரஜனும் சரி, பாஜகவும் சரி; இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நிரூபித்தனர். ஆனால் தற்போது அமைச்சர் மாபா பாண்டியரஜன், "கீழடியில் உலகத் தரமான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்; அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்" என்கிறார். ஒன்றிய அரசு கீழடியை மூடிவிடச் செய்த சதிவேலைகளை அறியாததுபோல் இப்படி இவர் பேசுவதென்ன?

    தமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூதமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ

    ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் தொல்லியல் துறை தொல்லையியல் துறையாக மாறியதை அடுத்து எழுந்த மாறாத எதிர்ப்பின் காரணமாக, தமிழகத் தொல்லியல் துறையே கீழடி ஆய்வை மேற்கொள்ளும்படியானது. சிவானந்தம் தலைமையில் நான்காம் ஆண்டு ஆய்வில் கிடைத்த சான்றுகள் தற்போது புதிய உண்மைகளை உணர்த்தியிருக்கின்றன. "தேர்ந்த எழுத்தறிவும் சீரிய கலையுணர்வும் கைவினைத் தொழில்நுட்பமும் வெளிநாட்டு வணிகமும் 2600 ஆண்டுகளுக்கு முன்பேயே பெற்றிருந்தவர்கள் தமிழ்மக்கள்" என்கின்றன அந்த நான்காம் ஆண்டு கீழடி அகழாய்வுச் சான்றுகள். இப்போது அய்ந்தாம் ஆண்டு ஆய்வு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 110 ஏக்கர் கீழடி தொல்லியல் மேட்டைச் சுற்றி மேலும் 90 ஏக்கர் மேடு உள்ளது. மூன்று ஊர்களை உள்ளடக்கிய அந்த மேடும் தொல்லியல் எச்சங்களைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆக கீழடி மற்றும் சுற்றியுள்ள மொத்த 200 ஏக்கர் மேட்டையும் "பாதுகாக்கப்பட்ட பகுதியாக" உடனடியாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசு.

    கீழடியில் இதுவரை கிடைத்த சான்றுகள், உலகின் "நாகரிகம் வாய்ந்த தொல்குடிகள் தமிழர்கள்" என்பதைச் சொல்வதால் அதனை உலகறியச் செய்ய, உலகத் தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகம் அவசியமாகும். அதனை அமைக்க அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஒன்றிய அரசின் உதவியை நாடுவது காரியத்தையே கெடுத்துவிடக் கூடும்! காரணம் ஒன்றிய அரசு கீழடிக்கு எதிரானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதன் உதவியை நாடும் அமைச்சரும்கூட ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் அட்டூழியத் திட்டங்களை இன்றும்கூட ஆதரிப்பவர்தான். உதாரணத்திற்கு: 5ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை ஆதரிக்கிறார்; பகவத் கீதையை பொறியியலில் பாடமாக்குவதை ஆதரிக்கிறார். இப்படிப்பட்ட அமைச்சர் கீழடி அருங்காட்சியகம் அமைக்க ஒன்றிய அரசின் உதவியை நாடுவது, காரியத்தையே கெடுக்காமல் வேறென்ன செய்யும்?

    எனவே தமிழ்நாடு அரசு தானே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்; கீழடி மற்றும் சுற்றுப் பகுதியை "பாதுகாக்கப்பட்ட பகுதியாக" அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    TVK President T Velmurugan has urged to set up world class museum at Keezhadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X