சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பு.. பொது மேடையில் அறிவுரை கூறிய வெங்கையா.. நெளிந்தபடியே சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

சென்னை: எந்த மொழியையும் திணிக்கவே கூடாது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையின் படி மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியை திணிக்கும் ஒரு முயற்சி என தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

அமித் ஷா யாரென்று இப்போது தெரிகிறதா? புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. வியந்து பார்த்த முதல்வர்!அமித் ஷா யாரென்று இப்போது தெரிகிறதா? புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. வியந்து பார்த்த முதல்வர்!

புத்தகம்

புத்தகம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.

எதிர்க்கவும்

எதிர்க்கவும்

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார். அவர் கூறுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது.

கற்க வேண்டும்

கற்க வேண்டும்

தாய் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளையும் கற்றதால் இந்த உயர்வை பெற முடிந்தது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய்மொழியில் பேச கற்றுக் கொடுங்கள். அதே நேரம் மற்ற மொழிகளை கற்க செய்யுங்கள். மற்ற மொழிகளையும் ஆழமாக கற்க வேண்டும் என்றார் வெங்கையா.

நெளிந்த படி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

நெளிந்த படி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

வெங்கையா நாயுடு மும்மொழி கொள்கை குறித்து பேசுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியபோது அங்கிருந்த முதல்வர் எடப்பாடியும் ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நெளிந்தபடியே சிரித்தனர்.

English summary
Vice President of India Venkaiah Naidu says about no one should impose any language or oppose the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X