சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவுக்கு தனிசொகுசு ரயிலில் பயணித்த வெங்கையா நாயுடுவுக்காக.. தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனி சொகுசு ரயிலில் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடைய வருகைக்காக நேற்று அனந்தபுரி, முத்துநகர் ரயில்கள் ஒருமணி நேரம் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, 2 நாள் பயணமாக பெங்களூருவில் இருந்து தனிவிமானத்தில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் சித்தூரில் நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பினார்

venkaiah naidu went to andhra by separate train from chennai, passenger train service affected

இந்நிலையில் அவருக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்ட தனி சொகுசு ரயில் காலை 4 மணிக்கு திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால் காலை 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 8.20 மணிக்கு தான் சித்தூருக்கு புறப்பட்டு சென்றது.

ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார் ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்

இந்த ரயிலில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் முக்கிய பிரமுகர்கள் புறப்பட்டு சென்றார்கள். திரிசூலம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தில் தான் சொகுசு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் தாம்பரம் எழும்பூர் இடையே ஒரே தண்டவாளத்தில் இரு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன.

English summary
Vice President M Venkaiah Naidu went to andhra by separate train from chennai, passenger train service affected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X