சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TamilNaduWeather update | 8 மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

    சென்னை: வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இருநாட்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    மழை தொடங்கினா காதலி போல் மகிழ்ச்சி.. தொடர்ந்தா மனைவி போல் தொல்லை.. நீடிச்சா மருமகள்.. நெட்டிசன்கள்மழை தொடங்கினா காதலி போல் மகிழ்ச்சி.. தொடர்ந்தா மனைவி போல் தொல்லை.. நீடிச்சா மருமகள்.. நெட்டிசன்கள்

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்று மற்றும் மேகக்கூட்டங்கள் குவிந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவிலும்

    கர்நாடகாவிலும்

    இதேபோல் கேரளாவின் பெரும்பாலான இடங்கள், லட்சத்தீவுகள் பகுதிகள், தெற்கு மற்றும் கடலோர கர்நாடகா, மற்றும் உள் கர்நாடகாவிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிக கனமழை பெய்யும்

    மிக கனமழை பெய்யும்

    இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 12 செமீ மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    நல்ல மழை இருக்கு

    நல்ல மழை இருக்கு

    இதேபோல், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    India Meteorological Department: Due to convergence of strong northeasterly winds, the ongoing heavy to very heavy rainfall activity over Tamil Nadu is very likely to continue during next 2 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X