சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: நம்மை அடுத்து ஆளப் போவது யார், நம்முடைய அடுத்த முதல்வர் யார்.. இதெல்லாம் மக்கள் மனதில் சாதாரணமாக எழும் ஆர்வங்கள். சுவாரஸ்யமான எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான அரசியல் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்பெல்லாம் கருணாநிதி அல்லது ஜெயலலிதா.. இந்த இருவரில் ஒருவர்தான் முதல்வராக வருவார்கள். எனவே பெரிய அளவில் மக்களுக்கு சுவாரஸ்யம் இருந்ததில்லை.

இடையில் விஜயகாந்த் எழுச்சி பெற்றார். ஆனால் அது கடைசியில் புஸ் ஆகிப் போனது. இந்த நிலையில் இப்போது வரலாறு காணாத வகையில் ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்களைக் காண முடிகிறது. மெரீனா பீச்சில் வரிசையாக தலைவர்கள், நடிகர்கள் படங்களை நிறுத்தி வைத்திருப்பார்களே.. அதுபோல இப்போது ஏகப்பட்ட பேர் முதல்வர் கனவில் மக்கள் முன்பு அணிவகுத்து நிற்கின்றனர்.

அடுத்த முதல்வர் யார்

அடுத்த முதல்வர் யார்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. இதுதான் நாம் நமது வாசகர்களிடம் முன் வைத்த கேள்வி. டிடிவி தினகரன் முதல் சிம்பு வரை பலருடைய பெயர்களை பரிந்துரைத்திருந்தோம். வந்த முடிவுகள் செம சுவாரஸ்யமாக உள்ளன. வாங்க பார்ப்போம்.

பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடைசி இடம்

பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடைசி இடம்

நமது வாசகர்கள் அளித்த வாக்குகளிலேயே மிகக் குறைந்த வாக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது. அவருக்குக் கிடைத்த வாக்குகள் 0.51 சதவீதம் மட்டுமே.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பொன். ராதாகிருஷ்ணனுக்குப் பரவாயில்லை. இவருக்கு மொத்த வாக்குகளில் 0.54 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் அடுத்த முதல்வர் என்று வாக்களித்தோர் எண்ணிக்கை 0.87 சதவீதம் ஆகும். 225 வாக்குகள் விழுந்துள்ளன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழிசையை விட பெட்டரான நிலையில் நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு 297 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 1.15 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மூத்த தலைவர் நல்லகண்ணு

மூத்த தலைவர் நல்லகண்ணு

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு நமது வாசகர்கள் கொடுத்துள்ள ஆதரவு 1.52 சதவீதமாகும். நல்ல தலைவர் நல்லகண்ணுவை எப்பத்தான் முதல்வரா தேர்ந்தெடுக்கப் போறீங்களோ மக்களே!

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த்

ஒரு காலத்தில் ஜெயலலிதாவையே மிரட்டி அரசியலில் கலக்கிய கேப்டன் விஜயகாந்த்துக்கு 3.36 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. விழுந்த வாக்குகள் 867.

விஜய், சிம்புவும்

விஜய், சிம்புவும்

விஜய், சிம்புவின் காம்போவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 3.43 சதவீதமாகும். விஜயகாந்த்தை விட இந்த காம்போவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸுக்கு

அன்புமணி ராமதாஸுக்கு

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு 4.53 சதவீதம் வாசகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. விழுந்த வாக்குகள் 1169.

கட்சியே ஆரம்பிக்காத ரஜினி

கட்சியே ஆரம்பிக்காத ரஜினி

இன்னும் கட்சியே ஆரம்பிக்காமல் உள்ள ரஜினிகாந்த்துக்கும் ஆதரவு இருக்கிறது. அதாவது 8.77 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. விழுந்த ஓட்டுக்கள் 2266 ஆகும்.

ரஜினியை விட கமல் பெட்டர்

ரஜினியை விட கமல் பெட்டர்

ரஜினிகாந்த்தை விட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவு கூடுதலாக உள்ளது. அதாவது 8.91 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. விழுந்த வாக்குகளில் கமலுக்குக் கிடைத்துள்ளது 2302 ஆகும்.

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது இந்த வரிசையில். அவருக்கு கிடைத்துள்ள ஆதரவு 9.71 சதவீதமாகும். அதாவது 2509 வாக்குகள்.

2வது இடத்தில் தினகரன்

2வது இடத்தில் தினகரன்

2வது இடத்தில் இருக்கிறார் அமமுக தலைவர் டிடிவி தினகரன். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 2783 ஆகும். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 10.78 சதவீதம் ஆகும்.

ஸ்டாலினுக்கு முதலிடம்

ஸ்டாலினுக்கு முதலிடம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது அடுத்த முதல்வர் இவர்தான் என்பது நமது வாசகர்களின் கருத்து. ஸ்டாலினுக்கு விழுந்த வாக்குகள் 10,166 ஆகும். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் இது 39.36 சதவீதமாகும்.

என் சாய்ஸ் இதில் இல்லை

என் சாய்ஸ் இதில் இல்லை

எனக்குப் பிடித்த தலைவர், அதாவது எனது சாய்ஸ் இதில் இல்லை என்று கூறியிருப்போர் எண்ணிக்கை 6.55 சதவீதம் பேர் ஆகும். அதாவது விழுந்த வாக்குகள் 1692.

English summary
Oneindia Tamil had asked its reader about who is the next Chief Minister, here is the result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X