சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தி.நகரா இது??.. கொஞ்சம் கூட கூட்டமே இல்லை.. தீபாவளி வியாபாரம் படு மோசம்.. பரபரப்பு வீடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி என்றாலே சென்னையில் இருக்கும் தி.நகர் பகுதி திருவிழா போல மாறிவிடும், மூச்சு விட கூட முடியாத அளவிற்கு தி.நகரில் கூட்டம் அள்ளும். ஆனால் இந்த தீபாவளிக்கு தி.நகர் ஏரியாவை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.. காரணம் கொரோனா!

Recommended Video

    வியாபாரம் படு மோசம் | Unseen Crowdless T-NAGAR | Oneindia Tamil

    தீபாவளி நேரத்தில் சென்னையில் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் தி.நகர் பகுதியும் ஒன்று. புதிய உடைகள், நகைகள், வீட்டு சாமான்கள் என்று பலவிதமான பொருட்களை வாங்க இங்கு மக்கள் கூடுவார்கள். சென்னைவாசிகள் மட்டுமின்றி, சொந்த ஊருக்கு செல்லும் மக்களும் இங்கு வந்து உடைகள், பொருட்கள் வாங்கி செல்வார்கள்.

    Very less Deepavali crowd in Famous T Nagar shops this year - video

    அண்டை மாவட்டங்களில் இருந்து கூட இங்கு உடைகள் எடுக்க கூட்டம் கூடும். தீபாவளிக்கு என்று சிறப்பு கடைகள் புற்றீசல் போல தோன்றுவது வழக்கம். பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் தி.நகர் பகுதியை நம்பித்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட தி.நகர்.. கொரோனாவிற்கு இடையே இந்த முறை எப்படி இருக்கிறது என்று பார்க்க நேரடியாக ஒன்இந்தியா குழு தி.நகருக்கே விசிட் அடித்தது... களத்தில் சென்று பார்த்தால் பெரிய அதிர்ச்சி!

    மூச்சு விட கூட முடியாத அளவிற்கு கூட்டம் அள்ளும் தி.நகர் இந்த முறை வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா காரணமாக தி.நகர் மொத்தமாக களையிழந்து போய் உள்ளது.

    கொரோனா அச்சம் காரணமாக, பலர் தி.நகரில் இந்த முறை துணி எடுக்கவில்லை.. மக்கள் கூட்டமே இல்லை, வருகிற கூட்டமும் எதுவும் வாங்குவது இல்லை என்று வியாபாரிகள் புலம்ப தொடங்கி உள்ளனர். பொருளாதார சரிவு காரணமாக வெடி விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது.ரோட்டோரமாக கடை வைத்திருக்கும் நபர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தீபாவளியை நம்பி கூட்டம் வரும் என்று நினைத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். விற்கும் பொருளையும் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வியாபாரிகள் புலம்புகிறார்கள்.

    கார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்கார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்

    ஒரே நாளில் பல லட்சம் வருமானம் பார்க்கும் தி.நகர் மொத்தமாக முடங்கி உள்ளது. இங்கு நடக்கும் சாலை பணிகளால் கூட்டம் குறைந்துள்ளது, என்று அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வருந்தி உள்ளனர்.

    மாஸ்க் போடுவது, சமுக இடைவெளி விடுவது என்று போலீஸ் கட்டுப்பாடும் அதிகம் இருப்பதால், கூட்டம் குறைந்துள்ளது. சென்ற வருடம்.. பரபரப்பாக காணப்பட்ட தி.நகரை இந்த வருடம் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. தி.நகரின் கள நிலவரத்தை தெரிந்து கொள்ள இந்த முழு வீடியோவை பாருங்கள்!

    English summary
    Very less Deepavali crowd in Famous T Nagar shops in Chennai this year - video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X