சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மது என்பது மனைவிக்குச் சக்களத்தி...சாவின் ஒத்திகை... டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு கவிஞர் வைரமுத்துவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Opening of liquor shops by bursting crackers in Kolar district

    40 நாட்கள் லாக்டவுன் அமலில் இருந்த நிலையில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    Veteran lyricist Vairamuthu opposes to open TASMAC

    இதனால் பல மாநிலங்களில் மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் திறக்காமல் இருந்தது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மதுபான கடைகளை நோக்கி எல்லை தாண்டி தமிழக குடிமகன்கள் சென்றனர்.

    "குடி"மக்களின் மூளையே மூளை.. வாட்டர் பாட்டிலை வைத்து.. சரக்கு பாட்டிலுக்கு இடம் பிடித்த சமயோஜிதம்!

    இதனையடுத்து தமிழகத்திலும் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கவிஞர் வைரமுத்துவும் தமது ட்விட்டர் பக்கத்தில் மதுபான கடைகள் திறப்பு எதிராக பதிவிட்டுள்ளார்.

    வைரமுத்துவின் பதிவு விவரம்:

    மது என்பது -
    அரசுக்கு வரவு;
    அருந்துவோர் செலவு.

    மனைவிக்குச் சக்களத்தி;
    மானத்தின் சத்ரு.

    சந்தோஷக் குத்தகை;
    சாவின் ஒத்திகை.

    ஆனால்,
    என்ன பண்ணும் என் தமிழ்
    மதுக்கடைகளின்
    நீண்ட வரிசையால்
    நிராகரிக்கப்படும்போது?

    இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

    English summary
    veteran lyricist Vairamuthu has opposed to open of TASMAC Shops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X