சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருமொழிக் கொள்கையில் உறுதி- முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு- நன்றி!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நிராகரித்து இருமொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் - முதல்வர் திட்டவட்டம் | Oneindia Tamil

    புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. புதிய கல்வியின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    புதிய கல்வி கொள்கையை எதிர்க்க 11 அம்சங்கள்- 11 கட்சி தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்புதிய கல்வி கொள்கையை எதிர்க்க 11 அம்சங்கள்- 11 கட்சி தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

     முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

    முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

    தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள், புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. திமுக தலைமையிலான 11 கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பினர். அதில் புதிய கல்வி கொள்கையின் ஆபத்தான 11 அம்சங்களையும் சுட்டி காட்டி இருந்தனர்.

     ட்விட்டரில் வைரமுத்து வேண்டுகோள்

    ட்விட்டரில் வைரமுத்து வேண்டுகோள்

    கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் எனது தமது ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

     இருமொழி கொள்கையே- முதல்வர்

    இருமொழி கொள்கையே- முதல்வர்

    இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பிiனைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, தமிழக அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

     முதல்வருக்கு வைரமுத்து நன்றி

    முதல்வருக்கு வைரமுத்து நன்றி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் தமது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டியிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்; தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

    English summary
    Veteran lyricist Vairamuthu thanks to Tamilnadu CM Edappadi Palanisamy on NEP row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X