சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயக்குமார் மீது நான் குற்றம் சாட்டவில்லை.. உண்மையைத்தான் சொல்கிறேன்.. வெற்றிவேல்

ஜெயக்குமார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயக்குமார் மீது நான் குற்றம் சாட்டவில்லை.. வெற்றிவேல்

    சென்னை: ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது நான் சொல்றது குற்றச்சாட்டு கிடையாது. அது உண்மையேதான். அதனால அவர் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

    தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த இளம் பெண்ணை அமைச்சர் ஜெயகுமார் கர்ப்பமாக்கியதாக ஒரு வாட்ஸ்அப் ஆடியோ நேற்று முழுவதும் வைரலாகி இணையத்தையே கலங்கடித்தது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் என்றும் இதனை வைத்து டிடிவி தினகரன் தரப்பினர் சதி செய்வதாகவும் தெரிவித்திருந்ததுடன், தன் மீதான குற்றச்சாட்டையும் மறுத்திருந்தார்.

    ரஜினியின் காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன?.. பரபரப்பு பின்னணி ரஜினியின் காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன?.. பரபரப்பு பின்னணி

    வீடியோ, ஆடியோ ஆதாரம்

    வீடியோ, ஆடியோ ஆதாரம்

    இந்நிலையில், இதுசம்பந்தமான கேள்விக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "ஜெயக்குமார் யார் என்று வடசென்னையே சொல்லும். தவறு செய்யவில்லை என்றால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்பட ஜெயக்குமார் ஒத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எனது பாதுகாப்பில் இல்லை. என்னிடம் மேலும் பல வீடியோ, ஆடியோ ஆதாரம் இருக்கிறது. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன்.

    பிறப்பு சான்றிதழ்

    பிறப்பு சான்றிதழ்

    ஜெயக்குமார் குரல் என்னது இல்லை என்று சொன்னாரே தவிர குழந்தை எனது இல்லை என்று சொல்லவில்லை. ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நான் சொல்வது தப்பா? ஒருவேளை அந்த பெண்ணுக்கு யாரோ ஒருவர் சொல்லி கொடுத்துதான் பேச வைக்கப்பட்டது என்றால் அதை நீங்களே ஆராயுங்கள். யாராது 10 நிமிஷத்துக்கு மிமிக்ரி செய்வார்களா? அந்த குழந்தை பிறந்ததும், அது சம்பந்தமான பிறப்பு சான்றிதழை மருத்துவமனை அளித்ததும் உண்மையே. அந்த பிறப்பு சான்றிதழை அழிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது முடியவில்லை.

    டிஎன்ஏ டெஸ்ட்

    டிஎன்ஏ டெஸ்ட்

    எனவே பாதிக்கப்பட்ட பெண்ணையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் அழைத்து சென்று ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இது அதிமுகவுக்கே ஒரு இழுக்கு. ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவர் மறைவுக்குப் பின் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    பெண்ணுக்கு மயக்க மருந்து

    பெண்ணுக்கு மயக்க மருந்து

    இவர் மட்டுமல்ல இன்னும் சில அமைச்சர்கள் மீது இத்தகைய புகார் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நேரத்தில் திண்டுக்கல்லில் ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து இது நடத்தப்பட்டுள்ளது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    ராஜினாமா செய்ய வேண்டும்

    ராஜினாமா செய்ய வேண்டும்

    ஒருவேளை அந்த பெண்ணுக்கோ, அவரது குடும்பத்துக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன். போராட்டம் கூட நடத்துவேன்.
    எனவே ஜெயக்குமார் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆடியோ விவகாரத்தில் ஜெயக்குமார் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் போல வேறு சில அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களும் திருந்த வேண்டும்"

    English summary
    Vetrivel demanded that the Governor should take action against Minister Jayakumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X