சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்களிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை சொல்லட்டா.. ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எச்சரிக்கை

அமைச்சர் ஜெயக்குமார் மீது வெற்றிவேல் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சனம் செய்த வெற்றிவேல்-வீடியோ

    சென்னை: "அமைச்சர் ஜெயக்குமார் இப்படியே நடந்து கொண்டிருந்தால், எந்தெந்த பெண்களிடம் அவர் எப்படி நடந்து கொண்டார் என்று வரிசையான லிஸ்டை தினமும் வெளியிடுவேன்"என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

    அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான வெற்றிவேல் திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஓ.ராஜா டிஸ்மிஸ் விஷயமாக விளக்கம் தந்தார்.

    பிறகு வழக்கம்போல் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை எந்த அமைச்சராவது 12 நாட்கள் தங்கியிருந்து மக்களை கவனித்தார்களா? ஆனால் டிடிவி தினகரன் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் என்னென்ன வேண்டும் என்று கேட்டு அதனை பூர்த்தி செய்தார்.

    இதுதான் நியாயமா?

    இதுதான் நியாயமா?

    அரசு வழங்கிய நிவாரணத்தில் துணிகள் வைத்து நடந்த முறைகேட்டினை எல்லோருமே பார்த்தார்கள். வீடியே கூட வெளியாகியது. இதை கண்டித்து டிடிவி தினகரன் ஒரு அறிக்கை தந்தார். ஆனால், அந்த அறிக்கைக்கு ஜெயக்குமார் போன்ற மொராலிட்டி ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்டேட்மெண்ட் தருவது நியாயமா?

    ஏன் நடவடிக்கை இல்லை

    ஏன் நடவடிக்கை இல்லை

    அண்ணன் என்னடா தம்பி என்னடா என்பது போல நடவடிக்கை எடுத்தேன் என்று இவர்கள் சொல்கிறார்கள். மந்திரி என்னடா எம்எல்ஏ என்னடா என்று ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்தானே? ஏன் அந்த சிந்து என்ற பெண் விஷயத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்?

    நோட்டீஸ் அனுப்பினேன்

    நோட்டீஸ் அனுப்பினேன்

    பாதிக்கப்பட்ட அந்த பெண் சிந்து சம்பந்தமாக அக்டோபர் 28 ஆம் தேதி ஜெயக்குமாருக்கு நான் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, இப்பேர்ப்பட்ட நல்ல மனிதராக இருக்கிறார் ஜெயக்குமார்.

    குடும்பங்களை சீரழித்தவர்

    குடும்பங்களை சீரழித்தவர்

    இப்படியே ஜெயக்குமார் நடந்து கொண்டிருந்தால், எந்தெந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று வரிசையான லிஸ்டை வெளியிடுவேன். நாளையிலிருந்து தினமும் ஒவ்வொன்னா சொல்வேன். ஜெயக்குமாருக்கு அவர் பண்ணிய தப்பு என்ன என்பது எல்லாமே தெரியும். அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு பல குடும்பங்களை சீரழித்தவர்" என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

    English summary
    Vetrivel says that There are losts of allegations against Jayakumar, and he'll release them soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X