சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலையாத கலைசெய்த பாரதிராஜாவை .. தாதா சாகேப் பால்கே விருதுக்குப் பரிந்துரைக்கிறோம்.. வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: "மண்ணின் இருதயம்... கல்லின் கண்ணீர்.. அரிவாளின் அழகியல்.. சரளைகளின் சரளி வரிசை.." என்று பாசத்துக்குரிய பாரதிராஜாவை கவிப் பேரரசு வைரமுத்து புகழாரம் சூட்டி உள்ளார்.. தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு இந்த நன்றியை உரித்தாக்கியதுடன், கலையாத கலைசெய்த பாரதிராஜாவை தாதா சாகேப் பால்கே விருதுக்குப் பரிந்துரைக்கிறோம்" என்ற ஒரு வலுவான கோரிக்கையையும் வைரமுத்து விடுத்துள்ளார்!

கவிஞர் வைரமுத்துவுக்கு 66 வது பிறந்த நாள் 4 நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.. இதற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.. அந்த வகையில், டைரக்டர் பாரதிராஜாவும் நீண்ட வாழ்த்தை பதிவு செய்திருந்தார்.. அதில் "கொரோனா பிரித்து வைத்திருந்தாலும் நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய் என்பது உலகறியும் என்ற வரிகள் அனைவரையும் ஈர்த்தது. இதற்கு காரணம் இவர்களின் கனத்த நட்பு பயணம்தான்..

Viaramuthu greets Bharathiraja on his birthyday

பொதுவாக, பேனா பிடிக்கிறவரை அவர் வாழும் காலத்திலேயே தமிழ் சமூகம் அங்கீகரிப்பதில்லை என்பதே நிதர்சனம்.. ஆனால் இதை சுக்குநூறாக நொறுக்கியவர்களில் ஒருவர் வைரமுத்து.. மரபுக்கும் புதுமைக்கும் பாலமாக இப்போது வரை தூணாக நிற்பவர்.. வெறும் கவிதை, பாட்டு என்ற ஒரு வரிக்குள் அவரை அடைத்துவிட முடியாது.. வளமான வார்த்தையில் மொழிக்கு பாதையை செப்பனிட்டவர்.. முதல் படத்தில் இருந்து இப்போது வரை இன்னும் அந்த எழுத்துக்கள் கிரியா ஊக்கியாக இருக்கிறது.

இந்த கலைஞனை சினிமாவுக்கு வழங்கிய பாரதிராஜாவுக்கே முதல் நன்றியை தமிழகம் தெரிவிக்க வேண்டும்.. பாரதிராஜா, வைரமுத்து கூட்டணி என்றாலே அந்த வருடத்தின் எந்த பாட்டாக இருந்தாலும் அது முழுமையாக உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான்.. வானம் எனக்கொரு போதி மரம் என்றபோதே, கவிஞனின் வித்து பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரே செட்டில்மெண்ட்...ரூ. 13,960 கோடி செலுத்த மல்லையா ரெடி!!ஒரே செட்டில்மெண்ட்...ரூ. 13,960 கோடி செலுத்த மல்லையா ரெடி!!

"கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது.. "பூவுக்குள் பூகம்பம் " என்ற வரிகளுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியவில்லை... பாதி புரிந்த மாதிரி இருக்கிறது.. பாதி தெளிந்த மாதிரியும் இருக்கிறது.. மிக சரியாக வைரமுத்துவை பாரதிராஜா பயன்படுத்தி கொண்டதே மாபெரும் கலைஞனின் சூட்சூம வெற்றியை ஊர்ஜிதம் செய்தது!

Viaramuthu greets Bharathiraja on his birthyday

அந்த வகையில் பாரதிராஜா தெரிவித்த வாழ்த்துக்கு தற்போது வைரமுத்து தன் நன்றியை வரிகளால் உதிர்த்துள்ளார். மேலும் இன்று பாரதிராஜாவின் பிறந்த நாள். அதேற்கேற்ப வைரமுத்து தனது வரிகளால் பாரதிராஜாவை உயர்த்தி வைத்து வார்த்தைகளைத் தீட்டியுள்ளார். அது சம்பந்தமான ட்வீட்டும் பதிவிட்டுள்ளார். அந்த வைர வரிகள் இதுதான்:

மண்ணின்
இருதயத்தை...
கல்லின்
கண்ணீரை...

அரிவாளின்
அழகியலை...
சரளைகளின்
சரளி வரிசையை...

பாவப்பட்ட தெய்வங்களை...
ஊனப்பட்டோர் உளவியலை...

கலாசாரப்
புதை படிவங்களைக்

கலையாத கலைசெய்த
பாரதிராஜாவை
தாதா சாகேப்
பால்கே விருதுக்குப்
பரிந்துரைக்கிறோம்.

நீங்களும்..."

என்று பதிவிட்டுள்ளார்.. வைரமுத்துவின் கோரிக்கைகளுக்கு நாடும், நாடாள்வோரும் செவி சாய்த்தால் பால்கே விருது பாரதிராஜாவுக்கே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

English summary
lyricist vairamuthu thanks to director bharathiraja wishes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X