'என்னை அடிச்ச சாருக்கு கொரோனா வரவச்சிடு முருகா.. 3வது மனைவி கட்டித்தரேன்'.. குட்டி பையன் க்யூட் வழிபாடு
சென்னை: ''என்னை அடித்த சாருக்கு கொரோனா வர வைத்தால், உனக்கு மூன்றாவதாக ஒரு பொண்டாட்டி கட்டித் தருகிறேன்'' என்று முருகனிடம் வழிபடும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பசுமையான காலமாகும். அப்போது நடந்த நினைவுகள் இப்போதும் வந்து போகும்.பொதுவாக பள்ளி பருவத்தில் மாணவர்கள் வெறுக்கும் ஒரு நபர் ஆசிரியர்தான்.

பள்ளி பருவம்
அதுவும் கடினமான படமான கணக்கு ஆசிரியர், ஆங்கில ஆசிரியரை கண்டாலே மாணவர்கள் பயந்து ஓடுவார்கள். ''ஹோம் வொர்க் முடிக்கவில்லை. இன்னிக்கு அந்த சார் மட்டும் வரக்கூடாது'' என்று மாணவர்கள் கடவுளிடம் விளையாட்டாக வேண்டுவது வழக்கம். ஏன் நம்மில் பலர் கூட சிறு வயதில் கடவுளிடம் வேண்டுதல் வைத்திருப்போம். இந்த வகையில் ஒரு பள்ளி சிறுவன் கடவுள் முருகனிடம் கோரிக்கை வைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

முருகனிடம் கோரிக்கை
இந்த வீடியோவில் பேசும் சிறுவன் ''ஸ்கூலுக்கு போனா வயசு பசங்களெல்லாம் என்னை அடிக்கிறாங்க, எனக்கு நடந்த கொடுமையை நீயே கேளு முருகா'' என்று சொல்கிறான், முருகன் பேசுவது போல் ஒருவர் குரல் கொடுத்து 'சொல்லு மகனே' என்கிறார். இதனை தொடர்ந்து பேசும் சிறுவன், 'நான் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் சார் ஒருத்தர் ஏபிசிடி எத்தனை எழுத்து என்று கேட்டார்.

என்னை அடிச்ச சாருக்கு கொரோனா வரணும்
அதற்கு நான் ஏபிசிடி மொத்தம் நான்கு எழுத்து என்று சொன்னேன். முருகா அதற்கு என்னை அப்படி போட்டு அடிக்கிறான் முருகா, அந்த ஸ்கூல்ல ஒன்னு நான் இருக்கணும் இல்லன்னா அந்த சார் இருக்கணும் முருகா என்று கூறுகிறான் சிறுவன். தொடர்ந்து ''எனக்காக ஒன்னு மட்டும் பண்ணு முருகா'' என்று கூறி மண்டியிட்ட சிறுவன் எழுந்து முருகனின் சிலைக்கு அருகில் சென்று, ''என்னை அடிச்ச அந்த சாருக்கு கொரோனா வரணும் .

3-வது பொண்டாட்டி கட்டி தருவேன்
நான் சொன்னதை மட்டும் நீ செய்தால் உனக்கு மூன்றாவதாக பொண்டாட்டி கட்டி தருவேன் முருகா '' என்று அந்த சிறுவன் வேண்டுதலை இறுதியாக முடிக்கிறான். இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த கு(சு)ட்டி பையன் முருகனிடம் கோரிக்கை வைப்பது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.