சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகளுக்கு சிதம்பரம் தொகுதி.. திருமாவளவன் செம குஷி.. வரலாறு அப்படி

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் செம குஷியில் உள்ளார்.

குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகியவற்றை உள்ளடக்கியது சிதம்பரம் லோக்சபா (தனி) தொகுதி. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த தொகுதி சிதம்பரம். 1998 முதல் 2004 வரை அடுத்தடுத்து 3 தேர்தல்களில் பாமக வசம் சென்றது.

பாமக சார்பில் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னுச்சாமி ஒரு முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார். அதேபோல ஏழுமலையும் இங்கு பாமக சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்? எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்?

காங்கிரஸ், திமுக வலிமை

காங்கிரஸ், திமுக வலிமை

சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ம் ஆண்டுக்கு பிறகு அதிமுக, மீண்டும் 2014ல் இங்கு வெற்றி பெற்று சாதித்துள்ளது. ஆக மொத்தம் அதிமுகவுக்கு ரொம்பவே வீக்கான தொகுதி சிதம்பரம்.

திருமாவளவன்

திருமாவளவன்

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். 128,495 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை அதிமுக வேட்பாளர் சந்திரகாசி தோற்கடித்தார். ஆனால் இம்முறை திமுக கூட்டணியில் களமிறங்குகிறது விடுதலை சிறுத்தைகள். திருமாவளவன் மீண்டும் இங்கு போட்டியிடப்போவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

திமுக, காங்கிரஸ், விசி கட்சி

திமுக, காங்கிரஸ், விசி கட்சி

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளதால், சிதம்பரம் தொகுதியில் அதிமுகவுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் என்பது உறுதி. ஏனெனில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி, ஒரு காலத்தில் இது காங்கிரஸ் கோட்டை. அக்கட்சியும் இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இத்தோடு விடுதலை சிறுத்தைகள், திமுக ஆகிய கட்சிகளின் கணிசமான வாக்கு வங்கியும் இணைவதால் திருமாவளவன் செம குஷி.

பாமக

பாமக

சிதம்பரம் (தனி) தொகுதியில், அதிமுகவைவிடவும், பாமகதான் ஸ்ட்ராங். எனவே அக்கட்சிக்கே தொகுதியை கொடுத்துவிட்டு, நல்ல பிள்ளையாக ஒதுங்குவதையே அதிமுக விரும்பும் என தெரிகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகளுக்கு, திமுகவும், காங்கிரசும் பெரும் பலம். அதேநேரம், பாமகவுக்கு வேறு பெரிய சப்போர்ட் இல்லை என்பது பலவீனம்.

English summary
Viduthalai chiruthaigal katchi is stronger in Chidambaram as compare to AIADMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X