• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"என்ன மிஸ்டர் திருமாவளவன்".. காயத்ரியை ட்விட்டரில் வச்சு செய்த விசிக.. போலீஸிலும் அதிரடி புகார்

|

சென்னை: "என்ன மிஸ்டர் திருமாவளவன், திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க" என்பது முதல் விசிக தலைவரை காயத்ரி ரகுராம் சீண்டி கொண்டே வந்த நிலையில், தற்போது அவர் மீது நடவடிக்கை கோரி சிறுத்தைகள் கொந்தளித்துவிட்டனர்.. காயத்ரியை ட்விட்டரிலேயே வெச்சு செய்த விசிகவினர், இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று புகாரும் தந்து விட்டனர்!

சும்மாவே விசிகவினரை சீண்டி, எதையாவது ட்விட் போட்டு பரபரப்பை கிளப்புவார் பாஜகவின் அபிமானி காயத்ரி ரகுராம்... இப்போது அவருக்கு கட்சியில் புதிய பொறுப்பு தரப்பட்டு விடவும், வீடியோ போட்டு வம்பிழுத்தார்.

ஏற்கனவே ஒருமுறை திருமாவை ஜோக்கர் என்று சொன்னார்.. இப்போது கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரத்தில் திருமாவளவன் தனது கருத்தை சொல்லியிருந்தார்.

நடிகை காயத்ரி ரகுராம்- இசையமைப்பாளர் தீனா தயாரிப்பில் தமிழக பாஜகவின் வெற்றிவேல் வீரவேல் பாடல் ரிலீஸ்

 மிஸ்டர் திருமா

மிஸ்டர் திருமா

இந்த விவகாரம் தமிழகத்தில் வெடித்து பல நாட்களாகியும் எதற்குமே வராத காயத்ரி, திருமா என்றவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து வீடியோ போட்டார்.. அதில், "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துறீங்களா?. நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டு காசு வாங்குறீங்க. அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? நாங்க குற்றச்சாட்டு வைக்கிறோம்.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

நாங்க ஏன் உங்கள நம்பனும். சுரேந்திரர் மற்றும் நடராஜை பக்கத்தில் வைத்து போட்டோ எடுத்துறீங்க. அவங்க இரண்டு பேரும் திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணியிருக்காங்க. நாங்க என்ன இழிச்சவாய. பிராமணர்கள் சுப்ரமணியம் என பேர் வைக்கிறார்கள்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

நாங்க முருகர் பெயரை தான் வைத்துள்ளோம். நீங்க சாமி பெயரை வைத்திருக்கிங்களா? தமிழ்நாடு கலாச்சாரத்தையும், கடவுளையும் பேசுர எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை! இதோட எதுவும் பேசாதீங்க நாங்க சும்மா இருக்கமாட்டோம்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. காயத்ரியின் இந்த வீடியோவுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவடி

காவடி

திருமாவளவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது தவறு என்பதையே குறிப்பிட்டனர்.. சுட்டிக்காட்டி கண்டித்தனர்.. "நீ காவடி எடுத்துருக்கியா அதுக்கு பதில் சொல்லுமா? படத்துல இல்லை நிஜத்துல..? புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் கனவுல கூட நினைக்கல" என்று நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றினர்.

விசிக

விசிக

இப்படி தொடர்ந்து காயத்ரி விசிகவினரை இழிவுபடுத்தியபடியே வந்ததால், ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர்கள், போலீசில் புகார் தந்துள்ளனர்.. அக்கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

 வீடியோ, ஆடியோ

வீடியோ, ஆடியோ

அதில், "எங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏழை-எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காக போராடி வரும் அவரைப்பற்றி சாதியின் பெயரை அடையாளப்படுத்தியும், மதத்தை அடையாளபடுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார்.

  Jothimani Question To Rajinikanth | OBC Reservation |kandhaSastiKavasam Issue
  கொந்தளிப்பு

  கொந்தளிப்பு

  அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படி திருமாவை மரியாதை இல்லாமல் பேசித்தான் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.. தொடர்ந்து இப்படி மோதியும், சீண்டியும் வருவதால் சிறுத்தைகள் கொந்தளித்து உள்ளனர்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Viduthalai Siruthai Katchi complaint on bjp Gayathri raghuram
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X